உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் முக்கிய கலந்தாய்வு.!

176 பார்வைகள்

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலொன்றுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தெல்லிப்பளை பிரதேச செயலாளரால் ஒப்பமிடப்பட்டு, மேற்படி காணிகளின் உரிமையாளர்களான 17 பேருக்கும் இதற்கான அழைப்புக் கடிதங்கள் தனித்தனியே கடந்த 19ஆம் திகதியிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தால் யாழ். மாவட்ட அரச அதிபருக்கும் தனக்கும் (தெல்லிப்பளை பிரதேச செயலாளர்) கடந்த 18ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் மூலம் அறிவுறுத்தப்பட்டதற்கமைவாக இந்தக் கூட்டத்தைக் கூட்டுவதாகப் பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடல் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

118 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

126 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

118 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்தை கோர விபத்து: தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் உயி@ரிழப்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

129 0 0