உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சிவாஜிலிங்கத்தின் வழியில் தேசியத் தலைவரின் பிறந்தநாள் நிகழ்வு.!

155 பார்வைகள்

மறைந்த சிரேஷ்ட அரசியல்வாதி எம்.கே. சிவாஜிலிங்கத்தின் வழியில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வு வழமை போன்று இம்முறையும் முன்னெடுக்கப்படும் எனவும், எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வல்வெட்டித்துறையில் தமிழ் மக்களை அணிதிரளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரும் வடமராட்சி அமைப்பாளருமான வி. கவிச்செல்வன் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72ஆவது பிறந்தநாள் நிகழ்வு எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை உலகத் தமிழர்களால் கொண்டாடப்படவுள்ளது.

உலகெங்கும் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றாலும், தலைவர் பிரபாகரன் சிறுவயதில் வாழ்ந்த இடமான வல்வெட்டித்துறை, ஆலடி வீதியில் உள்ள காணியில் வருடா வருடம் சிரேஷ்ட அரசியல்வாதி எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் எழுச்சிபூர்வமாகப் பிரதான நிகழ்வு இடம்பெறுவது வழக்கம்.

இம்முறை மேதகுவின் 72ஆவது பிறந்தநாள் அண்மித்துள்ள நிலையில் சிவாஜிலிங்கம் மறைந்துவிட்டார். இருப்பினும், அவரது வழியில் எத்தடை வரினும் அதே இடத்தில் மேதகுவின் பிறந்ததின நிகழ்வை வருடா வருடம் கொண்டாடியே தீருவோம். சிவாஜிலிங்கம் வழியில் அவர் முன்னெடுத்த விடயங்களைத் தமிழ்த் தேசியக் கட்சியின் சார்பில் முன்னெடுப்போம்.

எனவே, ஊர் மக்கள் உள்ளிட்ட தமிழ் மக்கள் அனைவரும் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வல்வெட்டித்துறையில் மேதகுவின் 72ஆவது பிறந்தநாளை வெகு சிறப்பான முறையில் கொண்டாடப் பெரும் எழுச்சியுடன் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

118 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

126 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

118 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்தை கோர விபத்து: தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் உயி@ரிழப்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

129 0 0