உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கல்முனை பொலிஸாரிடம் அல்-அஸ்ஹர் வித்தியாலயம் நன்றிக் கடிதம் கையளிப்பு

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
133 பார்வைகள்

கமு/கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர் தலைவர்களுக்கு வீதிப் போக்குவரத்து ஒழுங்கு விதிகள் தொடர்பாக கல்முனை பொலிஸ் தலைமை அலுவலகத்தினால் அண்மையில் நடாத்தப்பட்ட விழிப்புணர்வு செயலமர்வுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான நன்றிக் கடிதம் நேற்று (19) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம்.றிஷாத் அவர்களினால் கல்முனை பொலிஸ் தலைமை அலுவலகத்தின் வீதிப் போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் குறித்த நன்றிக் கடிதம் கையளிக்கப்பட்டது.

மாணவர்கள் மத்தியில் வீதிப் போக்குவரத்து ஒழுங்கு விதிகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, எதிர்காலத்தில் பொறுப்புணர்வுள்ள வீதிப் பயனாளர்களாக அவர்களை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இச்செயலமர்வு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக அதிபர் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை மேம்படுத்தும் இவ்வாறான பயனுள்ள செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய கல்முனை பொலிஸ் தலைமை அலுவலகத்திற்கும், வீதிப் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினருக்கும் பாடசாலைச் சமூகம் சார்பில் நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

125 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

128 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

121 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்தை கோர விபத்து: தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் உயி@ரிழப்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

131 0 0