உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக நடவடிக்கைகள் பாதிப்பு.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
143 பார்வைகள்

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பல்கலைக்கழக ஊழியர்களின் நீண்டகாலச் சம்பள முரண்பாடுகள் மற்றும் கொடுப்பனவுப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு முன்வைக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி, பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்கள் இன்று (18) முன்னெடுத்த ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தினால் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வழமையான நிர்வாக மற்றும் சேவை நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

அரச பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் நீண்டகாலச் சம்பள முரண்பாடுகளைத் தீர்த்தல், 20 சதவீதக் கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்குதல், மேலதிக நேரப் பணிக்கான (OT) கொடுப்பனவுகளில் நிலவும் சிக்கல்களைத் தீர்த்தல் உள்ளிட்ட பின்வரும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி இவ் அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக நிறைவேற்று உத்தியோகத்தர்கள் சங்கம் (SEUEOA), தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் (SEUEU), பல்கலைக்கழகத் தொழிற்சங்கக் கூட்டுக் குழு (UTUJC) மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தொழிற்சங்க சம்மேளனம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் நாடளாவிய ரீதியில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற போராட்டத்திற்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.எம். அகமட் முனாஸ் மற்றும் நிறைவேற்று உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.எம். சுல்பி ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதன் விளைவாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அன்றாட நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் சேவை வழங்கும் செயற்பாடுகளில் பாரிய இடையூறுகள் ஏற்பட்டதுடன், பல்கலைக்கழகத்தின் வழமையான செயற்பாடுகளும் முடங்கின.

ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நீண்டகாலமாகப் பரிசீலிக்கப்பட்டு வந்த போதிலும், நடைமுறையில் நிவாரணம் வழங்கக்கூடிய உறுதியான தீர்வுகள் 2027 வரவு – செலவுத் திட்டத்திலும் உள்ளடக்கப்படவில்லை எனத் தொழிற்சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தொழிற்சங்கங்களின் இக்கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உடனடியாக உரிய தீர்வை வழங்காவிட்டால், எதிர்காலத்தில் இதைவிடத் தீவிரமான தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் எனப் பல்கலைக்கழக சமூகத்தினர் மத்தியில் எதிர்பார்ப்பும் கவலையும் ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

129 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

132 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

123 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்தை கோர விபத்து: தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் உயி@ரிழப்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

131 0 0