உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 18.11.2026

ராசி பலன்கள் 3 நாட்கள் முன்
104 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கான தேவைகளை தேடி தேடி நீங்களே பூர்த்தி செய்து கொள்வீர்கள். ஆசைகள் நிறைவேறும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத முன்னேற்றம் உங்களை வந்து சேரும். மன நிம்மதி கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். இறை நம்பிக்கை அதிகரிக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள், நண்பர்களை மீண்டும் சந்திக்க கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். மனது லேசாகும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்க பேச்சு வார்த்தைகள் தொடங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கு நிலவும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். ப்ரோமோஷன்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புது வாடிக்கையாளர்களின் சேர்க்கையால் வியாபாரம் எதிர்பாராத இலாபத்தை கொடுக்கும். நல்லது நடக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் கோபம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கோபத்தால் நிறைய நல்ல விஷயங்களை இழக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இன்று பொறுமை காப்பது அவசியம். இன்று காலையிலேயே தியானம் செய்து மனதை அமைதியாக வைத்துக்கொண்டு, இந்த நாளை தொடங்குங்கள். இறை வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில பேருக்கு வெளியூர் பயணங்களால் சந்தோஷம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உணவுப் பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. மற்றபடி இந்த நாளில் புது அனுபவங்களை பெறுவீர்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை என்று பெயர் புகழ் அந்தஸ்து கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். சென்ற இடமெல்லாம் கௌரவம் கூடும். எந்த இடத்தில் எல்லாம் தலை குனிந்து நின்றீர்களோ, அந்த இடத்தில் தலைநிமிர்ந்து நிற்கும் அளவுக்கு உங்களுடைய முயற்சிகள் வெற்றியைத் தரும். சொந்த பந்தங்களோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிதானம் தேவை. சண்டை போடக்கூடாது. புதுசாக பகையை வளர்த்துக் கொள்ளக் கூடாது. எல்லா இடத்திலும் கொஞ்சம் அனுசரணையோடு நடந்து கொள்ளுங்கள். வார்த்தையில் கவனம் தேவை. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் சிக்கனம் தேவை. அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று சந்தோஷமாக இருப்பீர்கள். மனதில் தேக்கி வைத்திருந்த காதலை வெளிப்படுத்துவீர்கள். மனதிற்கு பிடித்த வாழ்க்கைத் துணை அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. சுப காரிய தடை விலகும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். தேவையில்லாத டென்ஷன் குறையும். சந்தேகங்கள் விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பண பிரச்சினைகள் தீரும். கடன் சுமை குறையும். ஆரோக்கியம் சீராக இருக்கும். பெரியவர்களின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியமான நாளாக இருக்கும். மருத்துவ செலவுகள் குறையும். பிள்ளைகளுடைய படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் மன திருப்தியைக் கொடுக்கும். கல்வியில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணங்களால் ஏற்பட்ட உடல் அசதி நீங்கும். வியாபாரத்திலும் வேலையிலும் எதிர்பாராத முன்னேற்றம் கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை மீண்டும் சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் சொந்த பந்தங்களோடு வாக்குவாதம் செய்யக்கூடாது. தேவையில்லாத விஷயங்களை பேசாமல் இருப்பது குடும்ப ஒற்றுமைக்கு நல்லது.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலையில் உங்களுடைய திறமை வெளிப்படும். நீண்ட தூர பயணங்களால் கொஞ்சம் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உணவுப் பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 20.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். காரியத்தடை விலகும். விநாயகர் வழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். மாணவர்கள்…

136 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 17.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். மனதில் தேக்கி வைத்திருந்த ஆசைகள் நிறைவேறும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து வந்த பிரச்சினைகள்…

103 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 16.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். இன்றைய நாள் வேலைகள் எல்லாம் சுறுசுறுப்பாக தொடங்கும். கொஞ்சம் ஆடம்பர செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட…

131 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 14.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியமான நாளாக இருக்கும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து வந்த…

126 0 0