கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு; சி.ஐ.டிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ‘கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் வழக்கில் சாட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ள இரண்டு இந்தியப் பிரஜைகளுக்கும் அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் வினவுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (16) குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவும் இன்றைய வழக்கு விசாரணையின் போது நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.


