உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சிவாஜிலிங்கத்தின் புகழுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் அஞ்சலி.!

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
109 பார்வைகள்

வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராகப் பணியாற்றியவரும், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான மறைந்த எம்.கே.சிவாஜிலிங்கத்தின் புகழுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று திங்கட்கிழமை காலை நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

உடல்நலக் குறைவு காரணமாக நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு காலமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் இன்று வல்வெட்டித்துறையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றன. இதன்போது ஆளுநருடன் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், யாழ்ப்பாணம் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் வல்வெட்டித்துறை நகர சபையின் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டு அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த எம்.கே.சிவாஜிலிங்கம் தொடர்பில் ஆளுநர் வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பில்,
அவர் பல்வேறு பதவிகளை வகித்திருந்தபோதிலும், ஒருபோதும் தனக்காகவோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களுக்காகவோ தனிப்பட்ட உதவிகளையோ சலுகைகளையோ கோரியதில்லை என்றும், தனது மக்களின் உரிமைகளுக்காகவே குரல் கொடுத்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

1 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

121 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

132 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

134 0 0