திருக்கோவில் விஸ்வ துளசி வித்தியாலயத்தின் புதிய வகுப்பறைக் கட்டடத் தொகுதி திறப்பு.!
திருக்கோவில் விஸ்வ துளசி வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத் தொகுதி நேற்று ஞாயிற்றுக்கிழமை(15) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்வித்துறைசார் பிரமுகர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.






