உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சமூக வலைத்தள கட்டுப்பாட்டுச் சட்டமும் பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தங்களும் காலத்தின் தேவை.!

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
103 பார்வைகள்

பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனோஜனை விடுவிப்பதற்கு முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா முன்னெடுத்த முயற்சிகளுக்குத் தமிழ் தரப்பினர் விசேட நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும் எனவும் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டங்களில் சில திருத்தங்கள் அவசியம் எனவும் உலமா கவுன்சிலின் தலைவர் முபாறக் முப்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அனோஜனை விடுவிக்கும் விவகாரத்தில் அரசாங்கத்தை விட முதலாவதாகக் களமிறங்கியவர் பைசர் முஸ்தபா அவர்களாவார். அவர் தனது சொந்தச் செலவில் இப்பயணத்தையும் முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அரசாங்கம் தமது கடமையைச் செய்வதற்கு முன்வந்தது.

எனவே, அரசாங்கத்திற்கு அப்பால் நின்று அவர் ஆற்றிய இந்த மனிதாபிமானச் சேவை நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதாகும். இவ்விடயத்தில் ஏனைய சிலர் எவ்விதப் பங்களிப்பும் இன்றி வெறும் விளம்பரங்களுக்காக மட்டுமே செயற்பட்டனர்.. பைசர் முஸ்தபாவின் இப்பணியை அங்கீகரித்து தமிழ் தரப்பினர் அவரை அழைத்து விசேட நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

இது தவிர அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்தும் சட்டமானது இன்றைய காலத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இன்று நாட்டில் இனவாதம் பெரிதாகப் பெருக்கெடுத்து ஓடுவதற்குச் சமூக வலைத்தளங்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாதிருப்பதே முதன்மைக் காரணமாகும். எனவே, சமூக வலைத்தளங்களை நெறிப்படுத்துவதற்கான சட்டங்கள் கட்டாயம் கொண்டுவரப்பட வேண்டும்.

அதேவேளை, நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. இருப்பினும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் தொடர்பில் சில முக்கிய திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்.

குறிப்பாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களைத் தடுப்புக்காவல் உத்தரவின் (DO) கீழ் பொலிஸ் கட்டுப்பாட்டில் நீண்டகாலம் வைத்திருக்காது, அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்குள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும். மூன்று மாதங்களுக்கு மேல் தடுப்புக்காவல் உத்தரவு (DO) நீடிக்கப்படக்கூடாது என்ற சட்ட ஏற்பாடு உருவாக்கப்பட்டால், அது நீதித்துறையின் சுயாதீனத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க வழிவகுக்கும் என முபாறக் முப்தி தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

114 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

122 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

132 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

134 0 0