உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

எம்.கே. சிவாஜிலிங்கத்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.!

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
114 பார்வைகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவருமான கௌரவ எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவையொட்டி யாழ்ப்பாணம் வாழ் முஸ்லிம் மக்களும் தமது ஆழ்ந்த கவலையையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் கௌரவ என்.எம். அப்துல்லாஹ் விடுத்துள்ள விசேட இரங்கல் அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சிவாஜிலிங்கம் ஐயா அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் தமிழ்த் தேசியக் கோட்பாட்டோடு, தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் துடிப்புடன் களத்தில் நின்று போராடியவர். அன்னாரின் இழப்பு தமிழ்த் தேசியத்திற்கும் தமிழ் மக்கள் மத்தியிலும் என்றும் ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். அவரது மறைவினால் ஏற்பட்டுள்ள இடைவெளியை எவராலும் நிரப்ப முடியாது. மக்களால் முன்னெடுக்கப்படும் ஜனநாயகப் போராட்டங்களில் மக்களோடு மக்களாக இணைந்து போராடும் குணமும், மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது துணிந்து எதிர்க்கும் தைரியமும் அவரிடம் சிறப்பாகக் காணப்பட்டது.

யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களுக்கும் சிவாஜிலிங்கம் ஐயா அவர்களுக்கும் இடையிலான உறவு இன்று நேற்று உருவானதல்ல. 1990ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே யாழ்ப்பாண முஸ்லிம்களுடன் மிக நெருக்கமாகப் பழகிய விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ்த் தேசியத் தலைவர்களுள் அவரும் மிக முக்கியமானவர். தமிழ் – முஸ்லிம் மக்களிடையே ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் வலியுறுத்தி வாழ்ந்து காட்டியவர்.

கடந்த முதலாவது வடக்கு மாகாண சபையில் அவர் அங்கத்துவம் வகித்த காலத்தில், புத்தளத்தில் முஸ்லிம் மக்கள் எதிர்கொண்ட அறுவக்காடு குப்பை சேகரிப்பு நிலையத்தை இரத்துச் செய்யக் கோரிய போராட்டத்தின்போது, வடக்கு மாகாணத் தமிழ் மக்களின் பிரதிநிதியாக நேரடியாகப் போராட்டக் களத்திற்குச் சென்று முஸ்லிம்களின் உரிமைப் போராட்டத்திற்குத் தனது ஆதரவைத் தைரியமாக வெளிப்படுத்தியவர்.

அன்னாரது இழப்பு யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் மத்தியில் மிகுந்த துயரத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது துணைவியார், உறவினர்கள் மற்றும் அரசியல் நண்பர்கள் அனைவருக்கும் யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

114 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

122 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

132 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

134 0 0