உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற விபத்து; சிறுமி சிகிச்சை பலனின்றி உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
102 பார்வைகள்

மிஹிந்தலை, ரம்பேவ பகுதியில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நான்கு வயது சிறுமி நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த, பராக்கிரமபுர பகுதியைச் சேர்ந்த சிறுமியே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 10 ஆம் திகதி மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரம்பாவ பகுதியில் வெலி ஓயா சந்திக்கு அருகில் ஏ9 வீதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதைத் தொடர்ந்து, அவற்றில் ஒரு பேருந்தின் பின்னால் வந்த மூன்றாவது பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் காயமடைந்த 76 பயணிகள் அநுராதபுரம், மதவாச்சி மற்றும் மிஹிந்தலை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

மேலும், அவர்களில் 51 பேர் தொடர்ந்தும் அநுராதபுரம் மற்றும் மதவாச்சி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

114 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

122 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

132 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

134 0 0