உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பட்ஜட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து களமிறங்கும் தொழிற்சங்கங்கள்.!

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
125 பார்வைகள்

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் தமது துறைகளுக்கான மேலதிக கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவில்லை என்றும், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டி நாட்டின் பல்வேறு துறைசார் தொழிற்சங்கத்தினர் இவ்வாரம் தொடர் தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுபடவுள்ளனர்.

கால்நடை வைத்தியர்கள், மின்சார ஊழியர்கள், அரச சேவை மற்றும் பல்கலைக்கழகத் தொழிற்சங்கத்தினர் இந்தப் போராட்டங்களில் களமிறங்குகின்றனர்.

வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளில் தமது துறை முற்றாகப் புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை செவ்வாய்க்கிழமை சுகயீன விடுமுறையை அறிவித்துத் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இது குறித்து அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரஞ்சித் தெரிவிக்கையில்,
“நிதி அமைச்சரான ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ள 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கால்நடை வைத்தியர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் எதற்கும் தீர்வு முன்வைக்கப்படவில்லை. விவசாயத்துறை, கால்நடை அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கே.டி.லால்காந்தவிடம் கலந்துரையாடிப் பல கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் பயன் கிடைக்கவில்லை.

நாளை சுகயீன விடுமுறையை அறிவித்துப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். கோரிக்கைகளுக்கு அரசு தீர்வளிக்காவிடின் 2027ஆம் ஆண்டுக்கான எவ்வித அபிவிருத்தித் திட்ட நடவடிக்கைகளிலும் பங்குபற்றப் போவதில்லை. அதேபோல் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மற்றும் அரசியல் தலையீடுகளுடனான கூட்டங்களிலும் பங்குபற்றப் போவதில்லை.” – என்றார்.

“வரவு – செலவுத் திட்டத்தில் மின்சாரத் துறைக்கும், மின்பயனாளர்களுக்கும் எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை. மின்னுற்பத்திக்கான மின்கல (பெற்றரி) இறக்குமதியாளர்களுக்கு மாத்திரம் வரி விலக்களிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்ட போதிலும், தற்போது மின்கட்டணம் பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த வாரம் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.” – என்று மின்சார புதிய சேவை சங்கத்தின் தலைவர் ஜகத் விதானகே தெரிவித்தார்.

“அரச சேவையில் தெரிவு செய்யப்பட்ட 5 சதவீதமானோருக்கு மாத்திரமே மேலதிக கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், 95 சதவீதமானோருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த ஒருதலைப்பட்சமான செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த வாரம் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவோம்.” – என்று இலங்கை அரச சேவை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுனில் கொடிகார தெரிவித்தார்.

“பல்கலைக்கழகச் சேவைக் கட்டமைப்பில் கள உத்தியோகத்தர்களின் மேலதிக கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை. எமக்கும் மேலதிக கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும். இல்லையேல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்.” – என்று அனைத்துப் பல்கலைக்கழகச் சேவைத் தொழிற்சங்கத்தின் தலைவர் ரங்க மீகொட தெரிவித்தார்.

இதேவேளை, வரவு – செலவுத் திட்டத்தில் தமக்கான கொடுப்பனவு எதுவும் அதிகரிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி முன்பள்ளி ஆசிரியர்கள் பொலன்னறுவை நகரில் நேற்று அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சம்பளத்தையோ அல்லது மேலதிக கொடுப்பனவையோ அதிகரிக்காவிடின் பரவாயில்லை. வாழ்க்கைச் செலவுகளையேனும் குறைக்க வேண்டும். ஆனால், இந்த வரவு – செலவுத் திட்டத்தில் வாழ்க்கைச் செலவுகள் எதுவும் குறைவடையவில்லை.” – என்று அவர்கள் இதன்போது குற்றஞ்சாட்டினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

114 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

122 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

132 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

134 0 0