நீரில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை உ**யிரிழப்பு.!
ஹிக்கடுவை, நாரிகம கடற்கரையில் நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை மாலை நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 71 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஹிக்கடுவை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


