உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாடு மீண்டும் வங்குரோத்து நிலையடையும்.!

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
116 பார்வைகள்

தற்போதைய நிதி நெருக்கடி மற்றும் திறைசேரியின் கையிருப்பைக் கருத்திற்கொள்ளும்போது, 2027ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையடையும் சாத்தியம் காணப்படுகின்றது என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள பின்னணியிலும் நாட்டுக்குப் பாரிய வெளிநாட்டு முதலீடுகள் எவையும் கிடைக்கப்பெறவில்லை. தேசிய மட்டத்தில் பாரிய (மெகா) அபிவிருத்தித் திட்டங்கள் எவையும் ஆரம்பிக்கப்படவில்லை.

அரசமுறைக் கடன்களை 2028ஆம் ஆண்டு செலுத்த ஆரம்பிக்காவிடின் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையடையும் என்று சிலர் குறிப்பிடுகின்றார்கள். ஆனால் அவ்வாறான நிலைமை ஏற்படாது என்றும், 2027ஆம் ஆண்டு முதல் அரசமுறைக் கடன்களைத் திருப்பிச் செலுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எனினும், தற்போதைய நெருக்கடிகள் மற்றும் திறைசேரியின் கையிருப்பைக் கொண்டு ஆராய்கையில் 2027ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நாடு வங்குரோத்து நிலையடையும் சாத்தியமே காணப்படுகின்றது.

நிதி அமைச்சரான ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பொருளாதார ரீதியில் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நடுத்தர மக்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கைச் செலவுகள் நாளுக்கு நாள் உயர்வடைந்துள்ள பின்னணியில் மக்களுக்கு நேரடியாகத் தற்காலிக நிவாரணம் வழங்கும் முன்மொழிவுகள் எவையும் முன்வைக்கப்படவில்லை.

2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளில் 20 சதவீதமேனும் நிறைவேற்றப்படாத நிலையில், 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் போலியான வாக்குறுதிகளும் நடைமுறைக்குச் சாத்தியமற்ற திட்டங்களுமே தொகைக் கணக்கில் வழங்கப்பட்டுள்ளன. இவை நடைமுறையில் ஒருபோதும் வெற்றிபெறாது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

114 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

122 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

132 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

134 0 0