உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மீண்டும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவரானார் ஜே ஷா!

97 பார்வைகள்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவர் பதவிக்கு ஜே ஷா இரண்டாவது முறையாகவும் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற ஐசிசி பணிப்பாளர் சபை மற்றும் குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய இந்த நியமனம் இடம்பெற்றுள்ளதாக ஐசிசி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஜே ஷாவின் தலைமைத்துவத்தின் மீது பணிப்பாளர் சபை கொண்டுள்ள நம்பிக்கையை இந்தத் தீர்மானம் பிரதிபலிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜே ஷா, தம்மீது நம்பிக்கை வைத்த ஐசிசி பணிப்பாளர் சபைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், 2028ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெறுவது, உலகளாவிய ரீதியில் புதிய ரசிகர்களைக் கவர்வதற்கான முக்கிய வாய்ப்பாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

3ஆம் நாள் ஆட்டம் நிறைவு: இலங்கை அணி 82 ஓட்டங்களால் முன்னிலை!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து…

122 0 0
விளையாட்டுச் செய்திகள்

கால்பந்து வரலாற்றில் சர்வதேச மைல்கல்லைப் பதித்த டி.எப். சூடீன்!

90 ஆண்டுகளுக்கும் மேலான பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட நுவரெலியா கால்பந்து விளையாட்டுத் துறையில், இதுவரை எட்டப்படாத ஒரு சர்வதேச மைல்கல்லை நிலைநாட்டி, நுவரெலியா கால்பந்து சங்கத்தின் கீழ்…

126 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் விக்கெட் கீப்பர் லிட்டன்தாஸ் உலக சாதனை!

தென் ஆப்பிரிக்கா – பங்காளதேஷ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. பங்காளதேஷ் முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களை குவித்தது. இதற்கு…

152 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெதுவான பந்துவீச்சு : இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு அபராதம்

ராவல்பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மெதுவாகப் பந்து வீசிய குற்றச்சாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது. இதற்கமைய, பாகிஸ்தான்…

91 0 0