உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சிவாஜிலிங்கத்தின் புகழுடலுக்கு அமைச்சர் சந்திரசேகர் அஞ்சலி.!

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
124 பார்வைகள்

மறைந்த சிரேஷ்ட அரசியல்வாதி எம்.கே.சிவாஜிலிங்கத்தின் புகழுடலுக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

வல்வெட்டித்துறை – நெடியகாடு பகுதியில் உள்ள அன்னாரின் இல்லத்துக்குச் சென்ற அமைச்சர், அங்கு வைக்கப்பட்டுள்ள சிவாஜிலிங்கத்தின் புகழுடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தியமையுடன், அன்னாரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்குத் தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்தார்.

ஏற்கனவே அன்னாரது மறைவையொட்டி இரங்கல் செய்தியொன்றை வெளியிட்டிருந்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அரசியல் ரீதியாக மாறுபட்ட நிலைப்பாடுகள் நிலவிய போதிலும், தனிப்பட்ட ரீதியில் அவருடன் கொண்டிருந்த நட்பு மிகவும் ஆழமானது என்றும், கொள்கைகளுக்காக இறுதிவரை சமரசமின்றிப் போராடிய ஒரு துணிச்சலான ஆளுமையை நாடு இழந்து நிற்கின்றது என்றும் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

114 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

122 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

132 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

134 0 0