உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

2027 பட்ஜட்டில் 13 ஆயிரம் மில்லியன் ரூபாய் மலையக மக்களுக்காக ஒதுக்கப்படவில்லை.!

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
124 பார்வைகள்

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் மலையகத் தமிழ் மக்களின் சமூக நல்வாழ்வுக்காக 13 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுவதில் உண்மையில்லை என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள விசேட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“மலையகத் தமிழ் மக்களின் சமூக நல்வாழ்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 13 ஆயிரம் மில்லியன் ரூபாய் தொகை பற்றிய உண்மை விவரங்களை வெளிப்படையாகக் கூற விரும்புகின்றேன். பெருந்தோட்டத் கைத்தொழில் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, மலையகத் தமிழ் மக்களின் சமூக நலத் திட்டங்களுக்காக ஒதுக்கினோம் என்று கூறாதீர்கள்.

பின்தங்கிய எமது மக்களின் நேரடி காணி, வீடு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்காக விசேட நிதி ஒதுக்கீட்டை நீங்கள் வழங்கவில்லை என்பதை மறைத்து, இல்லாததை இருப்பதாகக் காட்டி, மனச்சாட்சியே இல்லாமல் பொய் கூறாதீர்கள்.

பெருந்தோட்டத் கைத்தொழில் துறைக்கு ஒதுக்கிய ஒதுக்கீட்டை, மக்களின் சமூக நலப் பணிகளுக்கான ஒதுக்கீடுகள் எனக் கூசாமல் கூறப்படும் பொய்கள், நண்பர் நிதி அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பெயரைக் களங்கப்படுத்தும் மலையளவு – மகா மலைநாட்டுப் பொய்கள் என்பதை ஜனாதிபதியிடம் நேரடியாகத் தெரிவித்துள்ளேன்.

ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திஸாநாயக்க, தேயிலை, இறப்பர், தென்னை, பனை ஆகிய இலங்கையின் பெருந்தோட்டத் கைத்தொழில் துறைக்கு ஒதுக்கிய 13 ஆயிரம் மில்லியன் ரூபாய் தொகையின் உண்மையான விவரங்கள் பின்வருமாறு,

  1. அம்பாந்தோட்டை, புத்தளம், வட – கிழக்கு பனை செய்கை விரிவாக்கம்: ரூபாய் 100 மில்லியன்
  2. தென்னை புனர்வாழ்வு: ரூபாய் 2,500 மில்லியன்
  3. இறப்பர் மர ஆராய்ச்சி: ரூபாய் 500 மில்லியன்
  4. தேயிலை தொழில் பேட்டைகள்: ரூபாய் 730 மில்லியன்
  5. தேயிலை, இறப்பர், தென்னை, பனை துறை ஊழியர்களின் பிரஜாசக்தி அபிவிருத்தி: ரூபாய் 3,000 மில்லியன்
  6. தரிசு நில மீள் நடுகை தேயிலை சிறு தோட்ட முதலாளிகளுக்கு மானியம்: ரூபாய் 820 மில்லியன்
  7. பெருந்தோட்ட தேயிலை முதலாளிகளுக்கு உர மானியம்: ரூபாய் 5,000 மில்லியன்
  8. இறப்பர் தோட்ட முதலாளிகளுக்கு மீள் நடுகை மானியம்: ரூபாய் 650 மில்லியன்
  9. தோட்ட முதலாளிகளுக்கு இறப்பர் உர மானியம்: ரூபாய் 1,000 மில்லியன்

இத்துடன் கடந்த வருடம் வழங்கப்பட்ட 200 ரூபாய் சம்பள உயர்வு மீண்டும் வழங்கப்படுகிறது. இதை முறையாக வழங்காமல் தேயிலைக் கொளுந்து நிறையை அதிகரித்து, கம்பனிகள் சம்பள உயர்வை வழங்கக் கடும் கெடுபிடி செய்கிறார்கள். அதனால், இம்முறை சம்பள உயர்வைச் சம்பள நிர்ணய சபை மூலம் வர்த்தமானியாக வெளியிடச் சொன்னேன். நான் சொன்னதை இந்த ஜனாதிபதி கேட்கவும் இல்லை, செய்யவும் இல்லை.

உண்மையில் 13 ஆயிரம் மில்லியன் ரூபாயை விட அதிகமாகவே தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது இவர்கள் காட்ட முயல்வது போன்று மலையகத் தமிழ் மக்களின் காணி, வீடு, கல்வி, வீதிகள், சுகாதாரம், மந்தபோசனை மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய சமூக, பொருளாதார, கலாச்சார நலன்களுக்காகப் பெற்றுத் தரும் திட்டங்களுக்காக அல்ல.

உண்மையில், அரசு இத்தகைய ஒரு தொகையை மலையக மக்களின் சமூக, பொருளாதார, கலாச்சார நலன்களுக்காக ஒதுக்கியிருந்தால், பட்ஜட் நேரத்திலேயே எழுந்து நின்று, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை வாழ்த்திப் பாராட்டும் முதல் கட்சித் தலைவராகவும் எம்.பியாகவும் நான் இருந்திருப்பேன். ஆனால், அது நடக்கவில்லை.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

114 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

122 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

132 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

134 0 0