உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்களை மேலும் 4 ஆண்டுகளுக்கு அரசு தொடர வேண்டும் : அலி சப்ரி கருத்து

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
119 பார்வைகள்

சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை குறைந்தபட்சம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்காவது தற்போதைய அரசு தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட கருத்து என்று முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை மற்றும் அதன் தொடர்ச்சியான வேலைத்திட்டங்கள் குறித்து தற்போதைய அரசு எதிர்காலத்தில் எவ்வாறான முடிவை எடுக்கும் என்பது எனக்குத் தெரியாது. எனினும், நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழலைக் கருத்திற்கொண்டு, இன்னும் குறைந்தபட்சம் 4 ஆண்டுகளுக்கு அந்தத் திட்டத்துடன் தொடர்ந்தும் பயணிப்பதே நாட்டுக்குப் பலன் தரும் செயலாகும்.

எனினும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசின் ஆட்சியின் கீழ் நாட்டின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு மிகக் குறைந்த மட்டத்திலேயே (ஒரு வீதம் மாத்திரமே) அதிகரித்துள்ளதாகத் தெரிகின்றது. அதேவேளை, நாட்டுக்குத் தேவையான அளவில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் ஈர்க்கப்படுவதற்கான சாதகமான சூழலும் தற்போது வெளிப்படையாகத் தெரியவில்லை.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

118 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

125 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

132 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

134 0 0