உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

2027 வரவு – செலவுத் திட்டம் ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் ஏமாற்றுத் திட்டமே.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
122 பார்வைகள்

“தூய நோக்கத்துடன், நேர்மையான இலக்குடன் உருவாக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டம் அல்ல இது. ஏழைகளை ஒதுக்கிவிட்டு, பணக்காரர்களுக்கு மாத்திரம் இடம் கொடுக்கும் ஒரு ஏமாற்றுத் திட்டத்தையே ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட உரை மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“ஜனாதிபதி இரண்டு உலகங்களுக்கு இடையே வழிதவறி நிற்பது போலவே அவரது செயற்பாடுகள் உள்ளன. ஏனெனில், அவர் அரசியல் பிறப்பிலிருந்தே ஒரு மார்க்சிசவாதி. ஆனால், அக்கொள்கையை இப்போது மறந்துவிட்டு, புதிய தாராளவாதக் கொள்கையின் கப்டனாக அவர் மாறிவிட்டார். அவர் முன்வைத்திருப்பது ஏழைகளின் வயிற்றில் அடிக்கும், அவர்களை மேலும் ஏழைகளாக்கிவிட்டுப் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கும் வரவு – செலவுத் திட்டமாகும்.

ஜனாதிபதி தனது உரையின் ஆரம்பத்தில் புத்த பெருமானின் உன்னத போதனையான ‘சக்கவத்தி சீஹநாத சூத்திரத்தை’ மேற்கோள் காட்டினார். நாட்டை எவ்வாறு ஆள்வது, வரவு – செலவுத் திட்டங்களை எவ்வாறு வகுப்பது என்பதையெல்லாம் அது கூறுகின்றது. அந்தச் சூத்திரத்துடன் இந்தப் பாதீட்டை ஒப்பிட்டுப் பார்த்தால், முறைகேடு, அநீதி, அழுத்தம், அமைதியின்மை மற்றும் நெருக்கடிகளையே இது நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

தற்போதைய காலகட்டத்தில் மிக ஏழ்மையான 20 சதவீதமான மக்களின் உண்மையான குடும்ப வருமானம் 19.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால், மிகப் பணக்கார 20 சதவீதத்தினரின் குடும்ப வருமானம் 6.8 சதவீதத்தால் உயர்ந்துள்ளது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான வருமான இடைவெளி 14.8 மடங்காக அதிகரித்துவிட்டது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப நாட்டின் 60 சதவீதமான மக்கள் வறுமையில் வாடும் நிலையே உருவாக்கப்பட்டுள்ளது.

விவசாயத்துக்காக இந்த வரவு – செலவுத் திட்டத்தில் கடுகளவு கூட நிவாரணங்கள் வழங்கப்படவில்லை. நெல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உறுதிமொழிகள் எதுவுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை. காய்கறி மற்றும் ஏற்றுமதிப் பயிர்ச் செய்கைகளும் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளன.

68 இலட்சம் மக்கள் வாக்களித்தது வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையுமான உருவாக்கவே தவிர, மக்களின் எதிர்பார்ப்புகளையும் 220 இலட்சம் மக்களின் கனவுகளையும் மழுங்கடிப்பதற்கல்ல. எனவே, தீவிர மார்க்சியத்தையும் புதிய தாராளவாதக் கொள்கையையும் கைவிட்டு, நாட்டின் சமூக ஜனநாயகம் மற்றும் சமூகச் சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி வருமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

119 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

126 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

132 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

135 0 0