உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஜனாதிபதியின் ‘பட்ஜட்’ வெற்றுவேட்டு மட்டுமே.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
129 பார்வைகள்

பெருந்தோட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை ஜனாதிபதி கண்டுகொள்ளவில்லை எனவும், ஒட்டுமொத்தத்தில் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் வெறும் வெற்றுவேட்டு மாத்திரமே எனவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதியால் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வரவு – செலவுத் திட்ட உரை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்து நீண்ட உரையாற்றினார். ஜனாதிபதி வெறும் கணக்குப்பிள்ளை போல் இருக்கக் கூடாது என்று ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன்.

வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் நான் ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தேன். ஆனால், அதில் குறிப்பிடப்பட்டிருந்த மலையக மக்களின் அத்தியாவசியத் தேவைகள் எவற்றையும் ஜனாதிபதி கருத்திற்கொள்ளவில்லை.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தினசரி சம்பளமான 200 ரூபாய் கொடுப்பனவைத் தொடர்ச்சியாக வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால், இன்று பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைச் செலவுகள் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதை ஜனாதிபதி அறியவில்லையா?

மலையக வீடமைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துவதாக ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்ட போதிலும், 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் இதுவரையில் வெறும் 50 வீடுகள் அளவு மாத்திரமே நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தத்தில் மலையக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தக்கூடிய ஆக்கபூர்வமான திட்டங்கள் எதுவும் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் இடம்பெறவில்லை.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

121 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

127 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

133 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

135 0 0