அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் கைது.!
அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசா நேற்றையதினம் காரைநகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
காணித் தகராறு ஒன்றின் போது பெண்ணொருவரை தாக்கியதாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அவர் நேற்றையதினம் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் காரைநகர் பொலிஸ் காவலரணில் கடமை புரியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் அவரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


