உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
14 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நேபாளத்தில் மின்சார ஊர்தி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ; 14 பேர் உயி@ரிழப்பு!

உலக செய்திகள் 17 மணி நேரம் முன்
98 பார்வைகள்

நேபாளத்தின் மக்வான்பூர் மாவட்டத்தில் மின்சார பயணிகள் மைக்ரோபஸ் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 700 மீற்றர் ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (12) அதிகாலை சுமார் 5.45 மணியளவில் மக்வான்பூர் மாவட்டத்தின் பிம்பேடி கிராமப்புற நகராட்சிக்கு உட்பட்ட சிசாபானிகாதி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தலைநகர் காத்மாண்டுவிலிருந்து தெற்கு நேபாளத்தின் சர்லாஹி மாவட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த மின்சார மைக்ரோபஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான வாகனம் வீதியை விட்டு விலகி சுமார் 700 மீற்றர் ஆழமான பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சத் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்த உறவினர்கள் மற்றும் அயலவர்கள் இந்த வாகனத்தில் பயணித்துள்ளனர்.

உயிரிழந்த 14 பேரில் 13 பேர் சர்லாஹி மாவட்டத்தின் சக்ரகட்டா கிராமப்புற நகராட்சிக்கு உட்பட்ட சுந்தர்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றையவர் 30 வயதுடைய வாகனத்தின் சாரதியாவார்.

உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்துக்குள்ளான மைக்ரோபஸ் 14 பயணிகள் பயணிக்கக்கூடிய வாகனம் எனவும், சாரதி உட்பட 20 பேர் அதில் பயணித்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த ஏழு பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ளதுடன், ஏனையோர் மேலதிக சிகிச்சைக்காக வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற இடத்திற்கு நேபாள இராணுவம், ஆயுதப்படை பொலிஸார் மற்றும் நேபாள பொலிஸார் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

மலைப்பாங்கான மற்றும் கடினமான நிலப்பரப்பைக் கொண்ட பகுதியில் விபத்து இடம்பெற்றதால் மீட்புப் பணிகள் சவாலானதாக அமைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வாகனத்தில் அதிகளவான பயணிகள் ஏற்றப்பட்டமை மற்றும் சாரதியின் களைப்பு உள்ளிட்ட காரணங்கள் தொடர்பிலும் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

விபத்து தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக மக்வான்பூர் மாவட்ட நிர்வாகத்தினால் விசாரணைக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு ஏழு நாட்களுக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானுடன் எந்த ஒப்பந்தமும் தேவையில்லை! : ட்ரம்பின் அறிவிப்பால் எண்ணெயின் விலை அதிகரிப்பு!!

ஈரானுடன் வொஷிங்டனுக்கு இனி எந்தவொரு ஒப்பந்தமும் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்வடைந்துள்ளன. “ஈரானுடன் எங்களுக்கு எந்த…

92 0 0
உலக செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் 23 வாகனங்கள் மோதி கோர விபத்து : 14 பேர் ப@லி

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) இடம்பெற்ற பாரிய வாகன விபத்தும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தும் காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 30 பேர்…

90 0 0
உலக செய்திகள்

ஈரானிலிருந்து செறிவூட்டப்பட்ட அணுசக்திப் பொருளின் ஒரு துகளைக் கூட வெளியேற அனுமதிக்கப் போவதில்லை!

ஈரானிலிருந்து செறிவூட்டப்பட்ட அணுசக்திப் பொருளின் ஒரு துகளைக் கூட வெளியேற அனுமதிக்க மாட்டோம் என்றும், ஈரானிய இஸ்லாமியக் குடியரசு மீது அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்தினால் அதற்குரிய…

110 0 0
உலக செய்திகள்

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் – 6 பேர் உயி@ரிழப்பு!

தெற்கு காசாவில் உள்ள நாசர் மருத்துவமனையின் கட்டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் உட்பட குறைந்தது ஆறு பேர்…

104 0 0