உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
124 பார்வைகள்

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று (12) வியாழக்கிழமை இடம்பெற்ற உந்துருளி விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி, சங்கராஜ மாவத்தையில் நேற்று காலை தென்னேகும்புர திசை நோக்கிப் பயணித்த உந்துருளி வீதியில் சறுக்கி கவிழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுதுஹும்பொல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணே உயிரிழந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த உந்துருளி செலுத்துநரும் பின்னால் பயணித்த பெண்ணும், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பெற்று வந்த பின்னால் பயணித்த பெண் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, பாணந்துறை, கிம்பத மாவத்தையில் நேற்று இரவு திக்கள திசை நோக்கிப் பயணித்த உந்துருளி ஒன்று, வீதியில் கை வண்டியைத் தள்ளிச் சென்ற நபர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த குறித்த நபர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கெசல்வத்த பகுதியைச் சேர்ந்த 69 வயதுடையவரே உயிரிழந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், உந்துருளியை செலுத்தியவரும் காயமடைந்து சிகிச்சைக்காக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

121 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

127 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

133 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

135 0 0