உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

போ*தைப்பொருட்களுடன் சிக்கிய நெடுநாள் மீன்பிடிப் படகு.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
116 பார்வைகள்

நாட்டின் தெற்குப் பகுதியிலுள்ள ஆழ்கடலில் கடற்படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருட்கள் எனச் சந்தேகிக்கப்படும் பொதிகளைக் கடத்திச் சென்ற ‘யசிரு புதா’ என்ற நெடுநாள் மீன்பிடிப் படகு காலி துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த படகிலிருந்து ஆறு சாக்குகளில் அடைக்கப்பட்டிருந்த 50 ஐஸ் போதைப்பொருள் பொதிகளும், 52 ஹெரோயின் போதைப்பொருள் பொதிகளும் மீட்கப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் போதே இந்தப் போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது, படகிலிருந்த ஐந்து சந்தேகநபர்களும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டனர்.

கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்றிருந்த இந்தப் படகில் போதைப்பொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையையடுத்து, நவம்பர் 11 ஆம் திகதி இது கைப்பற்றப்பட்டுள்ளது.

தற்போது கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருள் தொகையின் எடை மற்றும் அளவை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளைப் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

121 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

127 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

133 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

135 0 0