உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

முறையற்ற பயணங்களை மேற்கொண்டோருக்கு வீதிப் பாதுகாப்பு வழிகாட்டல்கள்.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
126 பார்வைகள்

வீதி விபத்துகளைக் குறைத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில், பிராந்திய தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் ஏற்பாட்டில் “பாதுகாப்பான போக்குவரத்து” விசேட விழிப்புணர்வு நிகழ்வு கல்முனை நகர்ப் பகுதியில் இடம்பெற்றது.

அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், பிராந்திய தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம். பௌசாத் இந்நிகழ்வினை ஒருங்கிணைப்புச் செய்திருந்தார்.

பிராந்திய தொற்றா நோய் தடுப்புப் பிரிவினரும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பொலிஸாரும் இணைந்து இக் கள நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இந்நிகழ்வில் தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம். பௌசாத், பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல். லபீர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

நேற்றைய நிகழ்வு விசேடமாக உந்துருளிகளில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இதன் போது பின்வருவன அடையாளம் காணப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

உந்துருளிகளில் பின் ஆசனத்தில் பாதுகாப்பற்ற முறையில் அமர்ந்து பயணம் செய்தல், சிறுபிள்ளைகள் தலைக்கவசமின்றிப் பயணம் செய்தல், உந்துருளி பெற்றோல் தாங்கியில் (Tank) சிறு குழந்தைகளை ஏற்றிச் செல்லல், தலைக்கவசப் பட்டிகளைச் சரியாக அணியாது பயணம் செய்தல், இத்தகைய தவறுகளுடன் பயணித்தவர்கள் வீதியில் தடுத்து நிறுத்தப்பட்டு, போக்குவரத்து விதிமுறைகளின் அவசியமும் விபத்துகளால் ஏற்படும் ஆபத்தான விளைவுகளும் சுட்டிக்காட்டப்பட்டன.

அத்துடன், வீதிப் போக்குவரத்துச் சட்டங்களை முழுமையாகப் பின்பற்றி வாகனங்களைச் செலுத்துவது பற்றிய பாதுகாப்பு வழிகாட்டல்களும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

வீதி விபத்துகளற்ற பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இக் கள நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்ளையும் வரவேற்பையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

121 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

127 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

133 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

135 0 0