உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லாத பட்ஜட்டே இது.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
110 பார்வைகள்

“ஐந்து மணிநேரம் ஜனாதிபதி உரையாற்றியிருந்தாலும், இது நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லாத வரவு – செலவுத் திட்டம் என்பதே எமது கருத்தாகும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசின் 2027ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அது குறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டிலுள்ள 220 இலட்சம் மக்களும் எதிர்நோக்கும் பாரிய பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு இந்த வரவு – செலவுத் திட்டத்தில் எவ்வித ஆக்கபூர்வமான தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை.

தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளன. பணவீக்கம் உயர்வடைந்துள்ளதுடன், மக்களின் வாழ்க்கைச் செலவும் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இவற்றுக்குத் தீர்வுகளை முன்வைக்கும் வகையிலான திட்டங்கள் எதுவும் இந்தப் பாதீட்டில் இடம்பெறவில்லை.

அத்துடன், நாட்டில் நிலவும் வறுமையை ஒழிப்பதற்கான முறையான வேலைத்திட்டங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லை.

மேலும், அரசால் முன்மொழியப்பட்டுள்ள வட்டியற்ற கடன் திட்டங்கள் தற்போதைய வங்கிக் கட்டமைப்பு ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் போது, அவை ஏற்கனவே வசதி படைத்த கடன் பெறுநர்களுக்கே சாதகமாக அமையும். பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு மூலதனத்தைப் பெற்றுக்கொள்வதில் தொடர்ந்தும் சிக்கல்கள் நீடிக்கும்.

ஜனாதிபதி சமர்ப்பித்த பொருளாதாரத் தரவுகள் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துள்ளதையும் பணவீக்கம் அதிகரித்துள்ளதையும் வெளிப்படுத்துகின்றது.

சாதாரண மக்களின் வாழ்வாதாரச் சுமைகளைக் குறைப்பதற்கான மனிதாபிமான ரீதியான தீர்வுகள் இந்தப் பாதீட்டில் காணப்படவில்லை.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

121 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

127 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

133 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

135 0 0