உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
14 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் 23 வாகனங்கள் மோதி கோர விபத்து : 14 பேர் ப@லி

உலக செய்திகள் 21 மணி நேரம் முன்
90 பார்வைகள்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) இடம்பெற்ற பாரிய வாகன விபத்தும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தும் காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மைக் காலங்களில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற மிக மோசமான வீதி விபத்தாக இது கருதப்படுகிறது.

புஜைரா நுழைவுப் பகுதிக்கு அருகிலுள்ள ஷேக் கலீஃபா பின் சயீத் வீதியில் நள்ளிரவு வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சரக்குகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியின் சாரதி கட்டுப்பாட்டை இழந்து மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் அந்த வாகனம் கவிழ்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, போக்குவரத்து நெரிசல் காரணமாக மெதுவாக நகர்ந்துகொண்டிருந்த நிலையில், வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களுடனும் பாரவூர்தி மோதியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் சுமார் 23 வாகனங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தைத் தொடர்ந்து பாரவூர்தியில் ஏற்பட்ட தீ, சேதமடைந்த ஏனைய வாகனங்களுக்கும் பரவியுள்ளது.

காயமடைந்த 30 பேரில் 15 பேர் சிகிச்சை பெற்று மருத்துவமனைகளிலிருந்து வெளியேறியுள்ளதுடன், ஏனைய 15 பேரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக புஜைரா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஐக்கிய அரபு இராச்சியப் பிரஜைகளும் வெளிநாட்டவர்களும் அடங்குவதாகவும், சிலரின் உடலங்களை அடையாளம் காண்பதற்காக டிஎன்ஏ பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தீயைக் கட்டுப்படுத்துதல், காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்புதல் மற்றும் சம்பவப் பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக அவசரகால மீட்புக் குழுவினர், சிவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

நேபாளத்தில் மின்சார ஊர்தி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ; 14 பேர் உயி@ரிழப்பு!

நேபாளத்தின் மக்வான்பூர் மாவட்டத்தில் மின்சார பயணிகள் மைக்ரோபஸ் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 700 மீற்றர் ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன்,…

98 0 0
உலக செய்திகள்

ஈரானுடன் எந்த ஒப்பந்தமும் தேவையில்லை! : ட்ரம்பின் அறிவிப்பால் எண்ணெயின் விலை அதிகரிப்பு!!

ஈரானுடன் வொஷிங்டனுக்கு இனி எந்தவொரு ஒப்பந்தமும் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்வடைந்துள்ளன. “ஈரானுடன் எங்களுக்கு எந்த…

92 0 0
உலக செய்திகள்

ஈரானிலிருந்து செறிவூட்டப்பட்ட அணுசக்திப் பொருளின் ஒரு துகளைக் கூட வெளியேற அனுமதிக்கப் போவதில்லை!

ஈரானிலிருந்து செறிவூட்டப்பட்ட அணுசக்திப் பொருளின் ஒரு துகளைக் கூட வெளியேற அனுமதிக்க மாட்டோம் என்றும், ஈரானிய இஸ்லாமியக் குடியரசு மீது அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்தினால் அதற்குரிய…

110 0 0
உலக செய்திகள்

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் – 6 பேர் உயி@ரிழப்பு!

தெற்கு காசாவில் உள்ள நாசர் மருத்துவமனையின் கட்டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் உட்பட குறைந்தது ஆறு பேர்…

104 0 0