உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வீதியோர ஆக்கிரமிப்புகளைத் தவிர்ப்போம்; நிந்தவூர் பிரதேச சபை அவசர அறிவுறுத்தல்.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
91 பார்வைகள்

வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சீரான பொதுப் போக்குவரத்திற்கு வழிவகுக்கவும் நிந்தவூர் பிரதேச சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட பொதுமக்களுக்கு சபை நிர்வாகத்தினால் விசேட விழிப்புணர்வும் அறிவுறுத்தல்களும் விடுக்கப்பட்டுள்ளன.

நிந்தவூர் பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள பிரதான மற்றும் உட்புற வீதிகளில் பொதுப் போக்குவரத்திற்கும் பொதுமக்களின் நடமாட்டத்திற்கும் இடையூறாக அமைந்துள்ள மரக்கிளைகள், புதர்கள், பூச்செடிகள், சட்டவிரோத படிக்கட்டுகள் மற்றும் ஏனைய தடைகளை உடனடியாக அகற்றுவது தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், வீதியோரங்களில் நீண்டகாலமாகக் குவித்து வைக்கப்பட்டுள்ள கற்கள், மணல், மண் மற்றும் ஏனைய கட்டுமானப் பொருட்களை உடனடியாக அகற்றி, வீதிகளைப் பொதுமக்கள் தடையின்றிப் பயன்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு சபை கேட்டுக்கொண்டுள்ளது.

பாதசாரிகள், பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் மற்றும் வாகனப் பயணிகளின் பாதுகாப்பையும், விபத்துகளற்ற சீரான போக்குவரத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இத்தீர்மானமும் விழிப்புணர்வு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனவே, நிந்தவூர் பிரதேச சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட அனைத்துப் பொதுமக்களும் இவ்விடயத்தில் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு, பொதுவீதிகளைத் தடையற்றதாகவும் பாதுகாப்பானதாகவும் பேணுவதற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

124 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

129 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

135 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

138 0 0