உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ரம்பேவ பேருந்து விபத்து; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
114 பார்வைகள்

அநுராதபுரம் யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் ரம்பேவ வெலி ஓயா சந்திக்கு அருகில் நேற்று (10) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் விரிவான விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மிஹிந்தலை பொலிஸாருக்கு அநுராதபுரம் மேலதிக நீதவான் டி.எல். சமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

மிஹிந்தலை பொலிஸாரால் ‘B’ அறிக்கையினூடாக மேற்கொள்ளப்பட்ட சமர்ப்பணங்களைத் தொடர்ந்து, மேலதிக நீதவான் ரம்பேவ பகுதியிலுள்ள விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டதுடன், விபத்துக்குள்ளான 03 பேருந்துகளையும் ஆய்வு செய்தார்.

விபத்தில் சிக்கிய 03 பேருந்துகள் தொடர்பாகவும் மோட்டார் வாகனப் பரிசோதகரிடம் தனித்தனி அறிக்கைகளைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று உயிரிழந்தவர்களின் உடல்களைப் பார்வையிட்ட நீதவான், சட்ட மருத்துவ அதிகாரி மூலம் பிரேதப் பரிசோதனைகளை மேற்கொண்டு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும், உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் பணித்துள்ளார்.

வவுனியாவிலிருந்து ரம்பேவ நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, அதே திசையில் சென்ற தனியார் பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த மற்றொரு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

சாரதியின் அபாயகரமான மற்றும் துரித இயக்கமே இவ்விபத்திற்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

124 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

129 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

135 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

138 0 0