உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
11 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சென்னை முழுவதும் நான்கு நாட்களில் 567 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்

இந்திய செய்திகள் 8 மணி நேரம் முன்
78 பார்வைகள்

சென்னையில் பட்டாசு கழிவுகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த 4 நாட்களில் மொத்தம் 567 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு, பட்டாசுக் கழிவுகளை விரைந்து சேகரித்து அகற்றும் வகையில், வழக்கமாக காலை நேரப் பணியில் ஈடுபடுத்தப்படும் சுமார் 19,275 தூய்மைப் பணியாளர்களுடன் கூடுதலாக 600 தூய்மைப் பணியாளர்கள் சிறப்புப் பணிக்காக மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், பட்டாசுக் கழிவுகளை அகற்றுவதற்காக டிப்பர் லாரிகள், ஜேசிபி இயந்திரங்கள், பாப்காட் இயந்திரங்கள் உள்ளிட்ட 350 கூடுதல் வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் சிறப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இவை தவிர, ஏற்கனவே களப்பணியில் ஈடுபட்டு வரும் சுமார் 5,000 வழக்கமான வாகனங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், பட்டாசுக் கழிவுகளைத் தனியாகச் சேகரித்து பாதுகாப்பாகக் கையாள்வதற்காக தூய்மைப் பணியாளர்களுக்கு 30,000 பிரத்யேக சேகரிப்புப் பைகள் வழங்கப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு, சென்னை மாநகரம் முழுவதும் கடந்த 7ம்தேதி அன்று 3.95 மெட்ரிக் டன், 8ம்தேதி அன்று 148.91 மெட்ரிக் டன், 9ம்தேதி அன்று 239.63 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை 3 மணி நிலவரப்படி, சுமார் 174.92 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் என மொத்தம் 567.41 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

பட்டாசுக் கழிவுகளை சேகரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட பட்டாசுக் கழிவுகள் வெடிக்காத பட்டாசுக் கழிவுகள் மற்றும் வெடிக்கப்பட்ட பட்டாசுக் கழிவுகள் என தரம் பிரிக்கப்பட்டு, அவை அறிவியல் பூர்வமாக அகற்றப்படும்.

வெடிக்காத பட்டாசுகள் தனியாகச் சேகரிக்கப்பட்டு, அவற்றை அகற்றுவதற்காக கும்மிடிப்பூண்டியில் உள்ள பிரத்யேக செயலாக்க மையத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

வெடிக்கப்பட்ட பட்டாசுகளிலிருந்து உருவாகும் காகிதங்கள், அட்டைப் பெட்டிகள் மற்றும் ரசாயனக் கலவைகள் இல்லாத இதர எரியக்கூடிய கழிவுகள் தனியாகச் சேகரிக்கப்பட்டு, கொடுங்கையூரில் அமைந்துள்ள 50 மெட்ரிக் டன் திறன் கொண்ட எரியூட்டும் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அறிவியல் பூர்வமாக அகற்றப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

சபரிமலையில் நெய்க்கு தட்டுப்பாடு!

சபரிமலை ஐயப்பன் கோவில் பருவகாலம் நெருங்கும்நிலையில், நெய் இருப்பு படிப்படியாக குறைந்து வருகிவதாக தெரிவிக்கப்படுகிறது. திருவிதாங்கூர் தேவஸ்தான வாரிய கூட்டம் நேற்று நடந்த நிலையில், அதன் தலைவர்…

86 0 0
இந்திய செய்திகள்

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி : தவெக எம்.எல்.ஏயை கைது செய்யுமாறு எடப்பாடி வலியுறுத்தல்!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக சட்டமன்ற உறுப்பினரை உடனடியாக கைது செய்யுமாறு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று…

84 0 0
இந்திய செய்திகள்

சமயபுரம் இரட்டைக் கொ@லை வழக்கு: முக்கிய சந்தேகநபர் சுட்டுப்பிடிப்பு!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி பகுதி அருகே இரண்டு சிறுவா்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆறு பேரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், காவலரை…

79 0 0
இந்திய செய்திகள்

இந்தியாவில் புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பு!

புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் உயிர்காக்கும் மருந்துகளின் விலையை வெகுவாகக் குறைக்கும் வகையில், திருத்தப்பட்ட புதிய அதிகபட்ச சில்லறை விலைகள் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம் நுகர்வோருக்கு…

93 0 0