உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட பரிசோதனை.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
108 பார்வைகள்

நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் ஆலோசனைக்கமைவாக நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொதுச் சுகாதார அதிகாரி பிரிவில் அமைந்துள்ள கமு/சது/விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் நுளம்பு கட்டுப்பாடு மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட பரிசோதனை நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த விசேட பரிசோதனையின்போது பாடசாலை வளாகங்கள், நீர் தேங்கக்கூடிய இடங்கள், பயன்படுத்தப்படாத பாத்திரங்கள் மற்றும் நுளம்பு பெருக்கத்துக்குச் சாதகமான சூழல்கள் என்பவை தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன.

நுளம்புப் பெருக்கு காணப்பட்ட மற்றும் பல்வேறு சுகாதாரக் குறைபாடுகள் பதிவான இப் பாடசாலைக்கு உடனடியாகச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதுடன், அதனைச் சீரமைப்பதற்கான அவகாசமும் அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாணவர்களுக்கும் பாடசாலை நிர்வாகத்தினருக்கும் டெங்கு நோய் தடுப்பு முறைகள், சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் நுளம்பு பெருக்கத்தைத் தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வுகளும் இதன்போது வழங்கப்பட்டன.

இந்தா டெங்கு விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் கலந்துகொண்டு தமது கடமைகளை முன்னெடுத்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

124 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

129 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

135 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

138 0 0