பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் தீபாவளி வாழ்த்துச் செய்தி
இலங்கை வாழ் இந்து மக்களுக்கும், அனைத்து இன, மத மக்களுக்கும் எனது இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இருளை அகற்றி ஒளியை ஏற்றும் தீபாவளித் திருநாளானது, தீமையை நன்மை வெற்றி கொள்வதையும், அறியாமையை அறிவு வெற்றி கொள்வதையும் எடுத்துரைக்கும் உன்னதமான நன்னாளாகும்.
பல்வேறு இன, மத மற்றும் கலாசாரங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து இத்திருநாளைக் கொண்டாடுவதன் மூலம் அன்பு, சகோதரத்துவம், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றின் செய்தியைப் பரப்புகின்றனர். கருணை, நேர்மறைச் சிந்தனை, நம்பிக்கை மற்றும் செழிப்பு ஆகியவற்றின் அடையாளமாகவும் இத்திருநாள் திகழ்கின்றது.
தீபாவளித் திருநாளானது எமது மனச்சாட்சியை ஒளிரச் செய்து, தனிப்பட்ட நலன்களைக் கடந்து மனிதகுலத்தின் நன்மைக்காகவும், சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் உழைக்க எம்மைத் தூண்ட வேண்டும். ஒரு தீபம் பல தீபங்களை ஒளிரச் செய்வதைப் போன்று, எம்மால் இயன்ற உதவிகளையும் ஆதரவுகளையும் வழங்கி, ஏழை எளிய மக்களின் வாழ்விலும் மகிழ்ச்சியையும் வளத்தையும் ஏற்படுத்த நாம் அனைவரும் முன்வர வேண்டும்.
அதேவேளை, இத்திருநாளைக் கொண்டாடும் போது பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாத்து, எதிர்காலச் சந்ததியினருக்கான வளமானதும் நிலையானதுமான இலங்கையைக் கட்டியெழுப்புவதில் அனைவரும் தமது பங்களிப்பை வழங்க வேண்டும்.
இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் இன, மத வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் பயணித்து, அமைதியும் சமத்துவமும் நிறைந்த வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப இத்தீபாவளித் திருநாள் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் வழங்கட்டும்.
இலங்கை வாழ் அனைத்து மக்களினதும் இல்லங்களில் மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பு நிறைந்திட இறைவனை பிரார்த்திக்கிறேன்…


