உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சத்தியலிங்கம் எம்.பியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
129 பார்வைகள்

தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் இந்து உறவுகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தீபாவளி என்பது இருளை அகற்றி ஒளியை ஏற்றும் திருநாள் மட்டுமல்ல; தீமையை வென்று நன்மையை நிலைநாட்டுதல், அறியாமையை அகற்றி அறிவொளியைப் பரப்புதல், வெறுப்பைக் களைந்து அன்பையும் நல்லிணக்கத்தையும் வளர்த்தல் ஆகிய உயரிய தத்துவங்களை எமக்கு உணர்த்தும் உன்னதமான பண்டிகையாகும்.

இன்றைய சூழலில், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பல்வேறு சமூகச் சவால்களுக்கு மத்தியில் வாழும் எமது மக்கள் அனைவரினதும் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையும் மகிழ்ச்சியும் மலர வேண்டும். சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வும், ஒற்றுமையும், சகோதரத்துவமும் வலுப்பெற்று, அனைவரும் சம உரிமையுடனும் கௌரவத்துடனும் வாழக்கூடிய அமைதியான சமூகத்தைக் கட்டியெழுப்ப இந்தத் திருநாள் உந்துசக்தியாக அமைய வேண்டும்.

எமது மக்கள் எதிர்நோக்கும் துயரங்கள் நீங்கி, அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டு, இளைய தலைமுறையினருக்கு வளமான எதிர்காலம் உருவாக வேண்டும் என இந்நன்னாளில் பிரார்த்திக்கின்றேன்.

இந்தத் தீபாவளித் திருநாள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சியையும், மனங்களில் அமைதியையும், வாழ்வில் வளத்தையும் நலத்தையும் கொண்டு வரட்டும்.

இன, மத வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயமும் நல்லிணக்கமும் மேலோங்கும் இலங்கையைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் லண்டனில் முன்னெடுப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ‘நவம்பர் 21ம் திகதி (21-11-2026) தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனில் குறித்த நிகழ்வு வைபவ ரீதியாக…

131 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவின் வழியில் அநுர அரசாங்கம்! : அம்பாறையில் சஜித் கடும் சாடல்

கோட்டாபய ராஜபக்ஷவைப் போலவே அநுரகுமார திஸாநாயக்க அரசும் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள்…

125 0 0
இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

129 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

132 0 0