உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வெறுப்புக்குப் பதில் கருணை; பிளவுக்குப் பதில் நல்லிணக்கம் : ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
106 பார்வைகள்

வெறுப்புக்குப் பதிலாக கருணையையும், பிளவுகளுக்குப் பதிலாக நல்லிணக்கத்தையும், அநீதிக்குப் பதிலாக நீதியையும் தேர்ந்தெடுத்து, மேலும் சிறப்பான, நியாயமான மற்றும் பரிவுமிக்க சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான நமது உறுதியை புதுப்பித்துக் கொள்வதற்குத் தீபாவளிப் பண்டிகை ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தீபாவளித் திருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“இருளை அகற்றி ஒளியை ஏற்றி வைக்கும் இந்து மக்களின் உன்னதமான சமய விழாவான தீபாவளித் திருநாளை முன்னிட்டு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். கிருஷ்ண பகவான், நரகாசுரன் எனும் அசுரனை வதம் செய்தமையை நினைவுகூர்ந்து, அதர்மத்தை வென்று தர்மம் நிலைநாட்டப்பட்டதைப் போன்று அனைவரதும் மனங்களிலுள்ள இருள் அகன்று ஒளி பரவட்டும் என்ற பிரார்த்தனையுடன் இந்துக்கள் சமயக் கிரியைகளில் ஈடுபடுகின்றனர்.

தீபாவளிப் பண்டிகையின் உண்மையான அர்த்தம் என்பது வெறும் வீடுகளை விளக்குகளால் ஒளிரச் செய்வதற்கு அப்பால் சென்று, மனித இதயங்களில் அன்பு, கருணை, சகோதரத்துவம் மற்றும் மானுடப் பண்புகளின் ஒளியை ஏற்றி வைப்பதாகும்.

எனவே, வெறுப்புக்குப் பதிலாக கருணையையும், பிளவுகளுக்குப் பதிலாக நல்லிணக்கத்தையும், அநீதிக்குப் பதிலாக நீதியையும் தேர்ந்தெடுத்து, மேலும் சிறப்பான, நியாயமான மற்றும் பரிவுமிக்க சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான நமது உறுதியை புதுப்பித்துக் கொள்வதற்குத் தீபாவளிப் பண்டிகை ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றது.

சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ஆகிய அனைத்துத் துறைகளிலும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தி, அனைத்து சமய மற்றும் கலாசார அடையாளங்களையும் மதிக்கும், அனைவரையும் சமத்துவத்துடனும் கௌரவத்துடனும் நடத்தும் ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் உயரிய பொறுப்புக்காக நாம் தற்போது உறுதியுடன் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றோம்.

பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மீண்டும் வலுப்பெற்று, உலகுக்கு  முன்னால் கௌரவத்துடன் நிமிர்ந்து நிற்கும் ‘அமைதி மற்றும் மனிதநேயத்தின் நாடாக’ இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக நாம் ஒன்றாகப் பயணிக்கும் இந்தப் பாதையானது, இந்த தீபாவளி நாளில் ஏற்றப்படும் தீபங்களின் ஒளியால் மேலும் ஒளிரட்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.

இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் இந்து பக்தர்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி, சௌபாக்கியம் நிறைந்த மனப்பூர்வமான இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் லண்டனில் முன்னெடுப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ‘நவம்பர் 21ம் திகதி (21-11-2026) தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனில் குறித்த நிகழ்வு வைபவ ரீதியாக…

131 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவின் வழியில் அநுர அரசாங்கம்! : அம்பாறையில் சஜித் கடும் சாடல்

கோட்டாபய ராஜபக்ஷவைப் போலவே அநுரகுமார திஸாநாயக்க அரசும் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள்…

125 0 0
இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

129 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

132 0 0