உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நவீன தொழில்நுட்பம், நீலப் பொருளாதாரம்; ஜப்பானிய தூதுவருடன் சஜித் பேச்சு.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
113 பார்வைகள்

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகச் சினேகபூர்வமான கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இலங்கைகான ஜப்பானிய தூதுவர் அகியோர் இசொமாட்டாவை நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து விரிவான உரையாடலை முன்னெடுத்தார்.

பொருளாதார அபிவிருத்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், சுற்றுச்சூழல் நிலைபேற்றுத் தன்மை, காலநிலை மாற்றத்துக்கு ஏற்பத் தகவமைத்துக்கொள்ளல், பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் நிர்வாகம், அத்துடன் நீலப் பொருளாதாரத்தின் நிலையான அபிவிருத்தி உட்பட இருநாடுகளுக்கும் முக்கியமான பல பிரதான துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இதன்போது விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.

ஜப்பானின் உயர் தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் அனுபவங்களைப் பயன்படுத்தி, நவீன விவசாயம், கடற்தொழில்கள், நிலையான மீன்பிடித் தொழில், பெருங்கடல் அறிவியல் மற்றும் காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய அபிவிருத்தி ஆகிய துறைகளில் மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்தச் சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அறிவுப் பகிர்வு, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், திறன் மேம்பாடு மற்றும் நிலையான பொருளாதார வாய்ப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் இரு நாடுகளின் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய தொழில்துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.

அனர்த்த அபாய முகாமைத்துவம், முன்னெச்சரிக்கை அமைப்புகள் மற்றும் மீள்திறன் கொண்ட உட்கட்டமைப்பு மேம்பாடு குறித்து ஜப்பான் கொண்டுள்ள குறிப்பிடத்தக்க அனுபவங்களை அங்கீகரித்து, பேரிடர் தயார்நிலை மற்றும் காலநிலையைத் தாங்கும் திறன் என்பன இரு தரப்பினராலும் முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டன.

இலங்கையுடன் ஜப்பான் பேணி வரும் நீண்டகால நட்பு மற்றும் நாட்டின் பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு வழங்கி வரும் பெறுமதிமிக்க பங்களிப்புகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஜப்பானிய அரசுக்குத் தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள இரு தரப்பு உறவுகளைத் திறம்படப் பேணுதல், நிறுவன ரீதியிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் இலங்கை மக்களின் நலன் மற்றும் செழிப்புக்குப் பங்களிக்கும் நீண்டகால அபிவிருத்தி முன்னுரிமைகளை அடைவதன் முக்கியத்துவம் குறித்தும் இந்தக் கலந்தாய்வின் போது மேலும் சுட்டிக்காட்டப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் லண்டனில் முன்னெடுப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ‘நவம்பர் 21ம் திகதி (21-11-2026) தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனில் குறித்த நிகழ்வு வைபவ ரீதியாக…

131 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவின் வழியில் அநுர அரசாங்கம்! : அம்பாறையில் சஜித் கடும் சாடல்

கோட்டாபய ராஜபக்ஷவைப் போலவே அநுரகுமார திஸாநாயக்க அரசும் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள்…

125 0 0
இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

129 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

132 0 0