உள்ளூர் பொறிமுறையில் நம்பிக்கையில்லை என்பதற்கு சோமதேவாவின் அறிக்கை உதாரணம்.!
செம்மணி புதைகுழி விவகாரத்தில் பேராசிரியர் ராஜ் சோமதேவா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை முற்று முழுதாக நிராகரிப்பதாகவும், இவ்வாறானவர்களின் செயற்பாடுகள் அரசாங்கத்தின் சார்பாகவே அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகவும், இது செம்மணி புதைகுழியை மேலும் அகழ்வுகளை மேற்கொள்ளாமல் மூடுவதற்குரிய செயலாகவே அமைந்துள்ளதாகவும், இதனால் தான் நாம் உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்து சர்வதேச நீதி விசாரணையை கோர தீர்மானித்துள்ளதாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 17 ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் செம்மணியில் மாபெரும் மக்கள் போராட்டம் முன்னெடுப்பது என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 11:30 மணியளவில் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீனத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் ஏற்பாடு செய்த கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


