உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இளைஞர் வேலைவாய்ப்பின்மை அரசின் பாரிய நிர்வாகத் தோல்வி.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
114 பார்வைகள்

நாட்டில் பட்டதாரிகளுக்கும் இளைஞர்களுக்கும் தேவையான தொழில்வாய்ப்புகளை உருவாக்க அரசால் முடியாமல் போவது, தற்போதைய அரசின் பாரிய நிர்வாகத் தோல்வியையே காட்டுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் நேற்று வெள்ளிக்கிழமை விசேட கூற்றை முன்வைத்து அரசிடம் கேள்விகளை எழுப்பி உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“இலங்கை தற்சமயம் எதிர்கொள்ளும் முக்கியப் பேரியல் பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியில் வேலைவாய்ப்பின்மை மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. குறிப்பாக இளைஞர்களுக்கும் உழைக்கும் வயதுடைய மக்களுக்கும் போதுமான மற்றும் நிலைபேறான தொழில்வாய்ப்புகள் இல்லாமல் இருப்பது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் சமூக நிலைபேற்றுத் தன்மையையும் பாதிக்கும் பாரதூரமான ஒரு பிரச்சினையாகும்.

எனவே, நாட்டில் நிலவும் தற்போதைய வேலைவாய்ப்பின்மை நிலவரம், அதன் பரவல் மற்றும் அதனைச் சரிசெய்வதற்கான அரசின் கொள்கை மற்றும் நடைமுறை வேலைத்திட்டங்கள் என்பன குறித்து அரசிடமிருந்து தெளிவான பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கின்றேன்” என்று கூறி 8 பிரதான கேள்விகளைச் சபையில் சமர்ப்பித்தார்.

அரசிடம் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய 8 பிரதான கேள்விகள்

  1. தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்கள்
    இலங்கையின் தற்போதைய வேலைவாய்ப்பின்மை நிலவரம் குறித்து அரசிடம் காணப்படும் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின் பிரகாரம், தொழிலற்றவர்களின் எண்ணிக்கை மற்றும் வேலைவாய்ப்பின்மை விகிதம் யாவை? இதனை வயதுப் பிரிவு, கல்வித் தகுதி மற்றும் பாலின ரீதியாக வெவ்வேறாக விவரிக்க முடியுமா? இத்தரவுகள் மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் திரட்டப்பட்டுள்ளனவா?
  2. பொருளாதாரப் பிரச்சினை ஏற்றுக்கொள்ளல்
    தற்சமயம் நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பாரதூரமான ஒரு பேரியல் பொருளாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்பதை அரசு ஏற்றுக்கொள்கின்றதா?
  3. எதிர்கால இலக்குகள்
    நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அரசு கண்டறிந்துள்ள வழிமுறைகள் மற்றும் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கும் வேலைத்திட்டங்கள் யாவை? அடுத்த 3 ஆண்டுகளில் ஆண்டுதோறும் எத்தனை புதிய தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது?
  4. முதலீட்டு மூலோபாயங்கள்
    நாட்டில் வேலைவாய்ப்பின்மையைக் குறைப்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதில் அரசு பின்பற்றும் முதலீட்டு மூலோபாயங்கள் யாவை? இந்த முதலீடுகள் மூலம் எத்தனை நேரடி மற்றும் மறைமுகத் தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
  5. நிதி மதிப்பீடு
    நாட்டில் நிலவும் வேலைவாய்ப்புப் பிரச்சினையை நடைமுறை ரீதியாகவும் நிலைபேறான வகையிலும் தீர்ப்பதற்குத் தேவைப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு, பொது மற்றும் தனியார் முதலீடுகளின் அளவை அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளதா? ஆமெனில், இதற்கான முதலீட்டுத் தேவை மதிப்பீடு மற்றும் அதனை அடைந்துகொள்வதற்கு வகுக்கப்பட்டுள்ள உத்தேச நிதி மூலோபாயம் யாது?
  6. சந்தை தேவைகளுக்கான ஆய்வுகள் தொழில் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், வேகமாக மாறிவரும் தொழில் சந்தையின் தன்மை, தொழில் கட்டமைப்பு மற்றும் எதிர்கால தொழில் தேவைகள் குறித்து அரசு மேற்கொண்டுள்ள மூலோபாய மதிப்பீட்டு ஆய்வுகள் யாவை?
  7. தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு
    கல்வி மற்றும் தொழில்முறைத் தகுதிகளுக்குப் பொருந்தாத தொழில்களைச் செய்வதையும், தொழிலாளர் திறனை முறையற்ற வகையில் பயன்படுத்துவதையும் குறைக்கும் அதேவேளையில், தொழில்களின் தரம், உற்பத்தித்திறன் மற்றும் ஊதிய அளவுகளை அதிகரிப்பதற்கு அரசாங்கத்திடம் காணப்படும் குறிப்பிட்ட வேலைத்திட்டங்கள் யாவை?
  8. புதிய தொழில்முயற்சியாண்மை வேலைவாய்ப்பின்மைப் பிரச்சினைக்குத் தீர்வாகப் புதிய தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவதையும் தொழில் துறையை ஊக்குவிப்பதையும் அரசு ஏற்றுக்கொள்கின்றதா? ஆமெனில், புதிய தொழில்முயற்சிகளை ஆரம்பித்தல், அதனைப் பேணிச் செல்லல் மற்றும் விரிவுபடுத்தல் என்பவற்றுக்காக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிதி, தொழில்நுட்ப மற்றும் கொள்கை ரீதியான நடவடிக்கைகள் யாவை?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் லண்டனில் முன்னெடுப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ‘நவம்பர் 21ம் திகதி (21-11-2026) தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனில் குறித்த நிகழ்வு வைபவ ரீதியாக…

131 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவின் வழியில் அநுர அரசாங்கம்! : அம்பாறையில் சஜித் கடும் சாடல்

கோட்டாபய ராஜபக்ஷவைப் போலவே அநுரகுமார திஸாநாயக்க அரசும் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள்…

125 0 0
இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

129 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

132 0 0