உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சபாநாயகர் விடயத்தில் சட்டமா அதிபரிடம் இதுவரை ஆலோசனை கோரப்படவில்லை.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
115 பார்வைகள்

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்படுகின்றது என்று ஆளும் தரப்பினால் கூறப்பட்ட போதிலும், இதுவரை அது குறித்து சட்டமா அதிபரிடம் எந்தவொரு ஆலோசனையும் கோரப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.

அரசுக்குச் சார்பான ஒருசில தனியார் சட்டத்தரணிகளிடம் பெறப்படும் கருத்துகளைச் சட்டமா அதிபரின் உத்தியோகபூர்வ ஆலோசனையாக எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமர்வின்போது ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“சபாநாயகருக்கு எதிராக ஊழல், மோசடி மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் உள்ளிட்ட 50 கடுமையான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய வகையில் எதிர்க்கட்சிகள் கூட்டாக நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சபையில் சமர்ப்பித்துள்ளன. ஆனால், நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள விடயங்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இடம்பெற்றுள்ளதால் அதனை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாது என ஆளும்தரப்பு சாக்குப்போக்குகளைக் கூறி வருகின்றது.

நீதிமன்ற விசாரணை என்று ஆளும்தரப்பால் மேலோட்டமாகக் குறிப்பிடப்படுகின்றதே தவிர, பிரேரணையிலுள்ள எந்தக் குறிப்பிட்ட குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அரசு இதுவரை தெளிவுபடுத்தவில்லை.

சபாநாயகருக்கு எதிரான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் இலஞ்ச, ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிலேயே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஆணைக்குழு விசாரணையை ஒருபோதும் நீதிமன்ற விசாரணை எனக் குறிப்பிட முடியாது.

அதேபோன்று, சபாநாயகருக்கு எதிரான வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோதிலும், அதற்கு இதுவரை உத்தியோகபூர்வ அழைப்பாணைகளோ அல்லது உத்தரவுகளோ பிறப்பிக்கப்படவில்லை. ஆகவே, இவற்றைச் சுட்டிக்காட்டி நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுக்காது நிராகரிக்க முடியாது.

சபாநாயகருக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்துச் சட்டமா அதிபரிடம் சட்ட ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக ஆளும்தரப்பினால் சபைக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நடைமுறையில் இதுவரை சட்டமா அதிபரிடம் எந்தவொரு ஆலோசனையும் கோரப்படவில்லை என்பதே உண்மையாகும்.

அரசுக்குச் சார்பான ஒருசில சட்டத்தரணிகளிடம் தனிப்பட்ட ரீதியில் ஆலோசனை கோருவதை, சட்டமா அதிபரின் உத்தியோகபூர்வ ஆலோசனையாக ஏற்றுக்கொள்ள முடியாது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் லண்டனில் முன்னெடுப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ‘நவம்பர் 21ம் திகதி (21-11-2026) தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனில் குறித்த நிகழ்வு வைபவ ரீதியாக…

131 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவின் வழியில் அநுர அரசாங்கம்! : அம்பாறையில் சஜித் கடும் சாடல்

கோட்டாபய ராஜபக்ஷவைப் போலவே அநுரகுமார திஸாநாயக்க அரசும் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள்…

125 0 0
இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

129 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

132 0 0