நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு மற்றும் அந்தமான் கடல் பிராந்தியத்துடன் இணைந்ததாக எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதியளவில் தாழ்மட்ட தளம்பல் நிலை ஒன்று உருவாகின்றது. இதன் காரணமாக நவம்பர் 13 ஆம் திகதியளவில் வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகக்கூடும். மேலும் இது தீவிரமடைந்து நவம்பர் 15 ஆம் திகதியளவில் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் தாழ் அமுக்கமாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஆகையினால் மீனவ சமூகத்தினரும் கடல்சார் ஊழியர்களும் மற்றும் பல நாட்கள் மீன் பிடிக்காக ஆழ் கடலுக்கு செல்லும் மீனவர்களும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


