உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக்கில் இலங்கை வீரர்களுக்கு வாய்ப்பு

121 பார்வைகள்

ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் (APL) கிரிக்கெட் தொடருக்கான அணிப் பட்டியல்களில் நான்கு இலங்கை வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

இதன்படி, இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க, பிளாட்டினம் பிரிவில் பக்தியா அணிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சகலதுறை ஆட்டக்காரர் கமிந்து மெண்டிஸ், கோல்ட் பிரிவில் நங்கர்ஹார் கொஸ்மிக் அணியிலும், அனுபவமிக்க விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா, கோல்ட் பிரிவில் கந்தஹார் வொரியர்ஸ் அணியிலும் இடம்பிடித்துள்ளனர்.

அதேவேளை, வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர, டயமண்ட் பிரிவில் அக்செல் யுனைடெட் காபூல் அணிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வீரர்கள் மற்றும் அவர்கள் இடம்பெற்றுள்ள அணிகளின் விபரங்கள் வருமாறு:

இந்தத் தொடரில் எக்செல் யுனைடெட் காபூல், கந்தஹார் வொரியர்ஸ், நங்கர்ஹார் கொஸ்மிக், பால்க் அணி மற்றும் பக்தியா அணி என ஐந்து அணிகள் பங்கேற்கவுள்ளன.
மேலும், ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான், மொஹமட் அமீர், அலெக்ஸ் ஹேல்ஸ், மொயின் அலி மற்றும் கொலின் மன்ரோ உள்ளிட்ட பல சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரங்களும் அணிப் பட்டியல்களில் இடம்பெற்றுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

3ஆம் நாள் ஆட்டம் நிறைவு: இலங்கை அணி 82 ஓட்டங்களால் முன்னிலை!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து…

122 0 0
விளையாட்டுச் செய்திகள்

கால்பந்து வரலாற்றில் சர்வதேச மைல்கல்லைப் பதித்த டி.எப். சூடீன்!

90 ஆண்டுகளுக்கும் மேலான பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட நுவரெலியா கால்பந்து விளையாட்டுத் துறையில், இதுவரை எட்டப்படாத ஒரு சர்வதேச மைல்கல்லை நிலைநாட்டி, நுவரெலியா கால்பந்து சங்கத்தின் கீழ்…

126 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் விக்கெட் கீப்பர் லிட்டன்தாஸ் உலக சாதனை!

தென் ஆப்பிரிக்கா – பங்காளதேஷ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. பங்காளதேஷ் முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களை குவித்தது. இதற்கு…

152 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெதுவான பந்துவீச்சு : இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு அபராதம்

ராவல்பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மெதுவாகப் பந்து வீசிய குற்றச்சாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது. இதற்கமைய, பாகிஸ்தான்…

91 0 0