உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

முன்னாள் அமைச்சர்கள் பட்டாளத்துடன் சீனத் தூதுவரை சந்தித்த திலித் ஜயவீர எம்.பி.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
113 பார்வைகள்

சர்வஜன பலய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர, இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங்கை நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தில் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இலங்கை – சீனா இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், சீனாவின் உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், பொருளாதார ஒத்துழைப்பு, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் இலங்கை இளைஞர்களுக்கான கல்வி வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளன.

இந்தச் சந்திப்பின்போது, இலங்கையுடன் சீனா நீண்டகாலமாகப் பேணிவரும் நட்புறவையும், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு வழங்கிவரும் பங்களிப்பையும் திலித் ஜயவீர எம்.பி. பாராட்டியுள்ளார்.

அத்துடன், “சீனா இலங்கையின் மிக முக்கியமான நண்பனாகும். எமது நாட்டுக்காகச் சீனா செய்துள்ள அளப்பரிய பங்களிப்புகளைக் கருத்தில் கொள்ளும்போது, அதற்குப் பதிலாகச் சீனா எம்மிடமிருந்து மிகக் குறைவாகவே எதிர்பார்த்துள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சந்திப்பு குறித்து தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள திலித் ஜயவீர எம்.பி., கடந்த இரண்டு தசாப்தங்களாக இலங்கை – சீனா உறவு மிகவும் வலுவடைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட எதிர்காலத்தை நோக்கி இலங்கை பயணிக்கும்போது, உள்நாட்டிலேயே தொழில்நுட்பங்களை உருவாக்கும் இலக்கை அடைவதற்காகச் சீனாவிடமிருந்து முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 50 ஆண்டுகளில் இலங்கையின் வளர்ச்சிப் பயணத்தில் சீனா எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது தொடர்பில் சீனத் தூதுவர் தனது கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பில் சர்வஜன பலய கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான ரொஷான் ரணசிங்க, வைத்தியர் சன்ன ஜயசுமன, காமினி வலேபொட, அனுராதா யஹம்பத், சட்டத்தரணி மதுர விதானகே, இரங்க மெண்டிஸ் மற்றும் அனுருத்த ஹேரத் உள்ளிட்ட பலர் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

120 0 0
இலங்கை செய்திகள்

தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் லண்டனில் முன்னெடுப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ‘நவம்பர் 21ம் திகதி (21-11-2026) தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனில் குறித்த நிகழ்வு வைபவ ரீதியாக…

133 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவின் வழியில் அநுர அரசாங்கம்! : அம்பாறையில் சஜித் கடும் சாடல்

கோட்டாபய ராஜபக்ஷவைப் போலவே அநுரகுமார திஸாநாயக்க அரசும் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள்…

127 0 0
இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

131 0 0