உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் விலகல்!

139 பார்வைகள்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரரான 38 வயதான கிளென் மேக்ஸ்வெல், சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் விலகுவதாக முறைப்படி அறிவித்துள்ளார்.

2025 ஜூன் மாதம் ஒருநாள் (ODI) போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றிருந்த அவர், தற்போது இருபதுக்கு 20 (T20I) வடிவத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து தனது 14 ஆண்டு கால சர்வதேச பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

தன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் அவுஸ்திரேலிய அணிக்காக 286 போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல், மொத்தமாக 7,226 ஓட்டங்களை விளாசியதுடன் 136 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இதில் 149 ஒருநாள் போட்டிகளில் 3,990 ஓட்டங்களும் (அதிகபட்சம்: 201*) 77 விக்கெட்டுகளும், அவுஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக 130 இருபதுக்கு 20 போட்டிகளில் 2,897 ஓட்டங்களும் (ரோஹித் சர்மாவுக்கு நிகராக 5 சதங்கள்) 51 விக்கெட்டுகளும், 7 டெஸ்ட் போட்டிகளில் 339 ஓட்டங்களும் அடங்கும்.

அவுஸ்திரேலிய அணி வென்ற 2015 மற்றும் 2023 ஒருநாள் உலகக் கிண்ண தொடர்களிலும், 2021 இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரிலும் பிரதான தூணாக திகழ்ந்த மேக்ஸ்வெல், 2023 உலகக் கிண்ணத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட நிலையிலும் ஆட்டமிழக்காமல் அடித்த 201* ஓட்டங்கள் கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாக பேசப்படுகிறது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் (Cricket Australia) 2026-27 ஆண்டுக்கான ஒப்பந்தப் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத நிலையில், இளைய வீரர்களுக்கு வழியமைக்கும் நோக்கில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

3ஆம் நாள் ஆட்டம் நிறைவு: இலங்கை அணி 82 ஓட்டங்களால் முன்னிலை!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து…

122 0 0
விளையாட்டுச் செய்திகள்

கால்பந்து வரலாற்றில் சர்வதேச மைல்கல்லைப் பதித்த டி.எப். சூடீன்!

90 ஆண்டுகளுக்கும் மேலான பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட நுவரெலியா கால்பந்து விளையாட்டுத் துறையில், இதுவரை எட்டப்படாத ஒரு சர்வதேச மைல்கல்லை நிலைநாட்டி, நுவரெலியா கால்பந்து சங்கத்தின் கீழ்…

126 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் விக்கெட் கீப்பர் லிட்டன்தாஸ் உலக சாதனை!

தென் ஆப்பிரிக்கா – பங்காளதேஷ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. பங்காளதேஷ் முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களை குவித்தது. இதற்கு…

152 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெதுவான பந்துவீச்சு : இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு அபராதம்

ராவல்பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மெதுவாகப் பந்து வீசிய குற்றச்சாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது. இதற்கமைய, பாகிஸ்தான்…

91 0 0