உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாளை முதல் ‘TIN’ இலக்கம் கட்டாயம்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
137 பார்வைகள்

குறிப்பிட்ட சில செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) சமர்ப்பிக்கப்படுவதை நாளை (01) முதல் கட்டாயமாக்கியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, வங்கியொன்றில் அல்லது நிதி நிறுவனமொன்றில் கணக்கொன்றைத் திறத்தல், கட்டிட வரைபடத்திற்கு அனுமதி பெறுதல், மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்தல் மற்றும் மோட்டார் வாகன உரிமத்தைப் புதுப்பித்தல் ஆகிய சந்தர்ப்பங்களில் TIN இலக்கத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், காணியொன்றை அல்லது காணியின் உரிமத்தைப் பதிவு செய்தல், வணிகத்தைப் பதிவு செய்தல், இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமொன்றின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் கடன் அட்டையைப் (Credit Card) பெறுதல் ஆகிய சந்தர்ப்பங்களிலும் செல்லுபடியாகும் TIN இலக்கத்தைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு முன்னர் TIN இலக்கம் செல்லுபடியானதுதானா என்பதைப் பொறுப்பான அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என உள்நாட்டு திறைசேரி திணைக்களம் அறிவித்துள்ளது.

TIN இலக்கத்தை இதுவரை பெறாத நபர்கள், உள்நாட்டு திறைசேரி திணைக்களத்தின் இ-சேவை (e-Services) மூலம் அதற்குப் பதிவு செய்து கொள்ள முடியும் என்றும் அறியத்தரப்பட்டுள்ளது.

அத்துடன், தன்னிடம் உள்ள TIN இலக்கம் செல்லுபடியானதா என்பதை உள்நாட்டு திறைசேரி திணைக்களத்தின் இ-சேவை வாயிலாக உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

உறுதிப்படுத்தல் வெற்றிகரமாக இடம்பெற்ற பின்னர் TIN இலக்கம் திரையில் தோன்றும் என்பதுடன், நபரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் TIN இலக்கம் தெளிவாகக் காட்டப்பட்டுள்ள அச்சிடப்பட்ட பிரதியை (Printout), குறிப்பிட்ட செயற்பாடுகளுக்காக உத்தியோகபூர்வ TIN சான்றிதழுக்குப் பதிலாக ஏற்றுக்கொள்ள முடியும் என உள்நாட்டு திறைசேரி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

125 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

113 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

121 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

125 0 0