உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சிறையில் அடைத்தாலும் நாமலே அடுத்த ஜனாதிபதி.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
143 பார்வைகள்

நாமல் ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டாலோ அல்லது அவர் சிறையில் தொடர்ந்து அடைக்கப்பட்டாலோ கூட, தேர்தலுக்குப் பின்னர் அவரை நாட்டின் ஜனாதிபதியாக்குவதற்கான ‘பிளான் பி’ திட்டம் தமது கட்சியிடம் தயாராக இருக்கின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சாந்த பண்டார தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாமல் ராஜபக்ஷவை அரசு சிறையில் அடைத்து வைத்திருந்தாலும், அவரை நாட்டின் ஜனாதிபதியாக்கும் உத்தி எமது கட்சியிடம் உள்ளது.

ஒருவேளை, நாமல் ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் நோக்கில் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும், அதனை எதிர்கொள்ளும் வகையில் ‘பிளான் பி’ திட்டம் எம்மிடம் உள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத்தேர்தல் என எந்தவொரு பிரதான தேர்தல் நடைபெற்றாலும், அந்தத் தேர்தல் முடிவடைந்து மூன்று அல்லது ஆறு மாதங்களுக்குள் நாமல் ராஜபக்ஷ நிச்சயமாக நாட்டின் ஜனாதிபதியாவார். இது உறுதியாக நடக்கும். இதனை ஊடகங்கள் குறித்து வைத்துக்கொள்ள முடியும்.” – என்றார்

தற்போதைய அரசியல் பின்னடைவுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

“தற்போதைய சவால்மிக்க அரசியல் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, எங்களது ‘பிளான் பி’ திட்டம் தொடர்பான மேலதிக இரகசிய விவரங்களை இப்போது வெளிப்படுத்த விரும்பவில்லை.

நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றால் நாமல் ராஜபக்ஷ பிரதமராவார். ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றால் அவர் ஜனாதிபதியாவார். எனவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களும் தொண்டர்களும் எவ்வித அச்சமும் இன்றித் தைரியமாக இருக்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

134 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

121 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

124 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

127 0 0