உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
29 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

குறிகட்டுவான் – நெடுந்தீவுக்கான படகு சேவைகள் பாதிப்பு!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
90 பார்வைகள்

யாழ்ப்பாணம், குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவுக்கு இடையிலான படகுச் சேவையில் ஈடுபட்டு வந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மூன்று படகுகளும் பழுதடைந்துள்ளதால், நெடுந்தீவுக்கான போக்குவரத்து பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

குறிகட்டுவான் – நெடுந்தீவு இடையே சேவையில் ஈடுபட்டிருந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் ‘நெடுந்தாரகை’ மற்றும் ‘வடதாரகை’ ஆகிய படகுகள் ஏற்கனவே பழுதடைந்திருந்த நிலையில், ‘குமுதினி’ படகு மட்டுமே சேவையில் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று மாலை 4.30 மணியளவில் குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 60 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினி படகு, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இயந்திரக் கோளாறு காரணமாகக் கடலில் தத்தளித்தது.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட கடற்படையினர், தமது படகில் சென்று குமுதினியில் இருந்த பயணிகளை மீட்டு, மீண்டும் குறிகட்டுவான் பகுதிக்கு அழைத்து வந்தனர்.

குமுதினி படகு பழுதடைந்தமையையும், நெடுந்தீவு நோக்கிப் பயணிக்கவிருந்தவர்கள் குறிகட்டுவானுக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டமையையும் அறிந்த நெடுந்தீவு மக்கள், “கரிகாலன்” எனும் தனியார் படகை குறிகட்டுவானுக்கு அனுப்பி வைத்தனர்.

அப்படகு அங்கிருந்த பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் நெடுந்தீவைச் சென்றடைந்தது. அதேவேளை, பழுதடைந்த குமுதினி படகும் நெடுந்தீவுக்கு இழுத்துச் செல்லப்பட்டது.

இதனிடையே, இன்று காலை 7.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து “சத்சரா” எனும் தனியார் படகு குறிகட்டுவான் வந்தடைந்தது.

மீண்டும் காலை 8.30 மணிக்கு அப் படகு நெடுந்தீவு நோக்கிப் பயணிக்கத் தயாரான போது, அரச உத்தியோகத்தர்கள், சுற்றுலாப் பயணிகள், பிரதேச மக்கள் எனப் ஏராளமானோர் ஏறுவதற்கு முற்பட்டதால் கடும் நெருக்கடி ஏற்பட்டது.

பின்னர், பலத்த சிரமங்களுக்கு மத்தியிலேயே பயணிகள் குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

குறிகட்டுவானில் இருந்து சுமார் ஒரு மணி நேரப் படகுப் பயணத்தின் பின்னரே நெடுந்தீவை அடைய முடியும். இவ்வாறான நீண்ட தூரப் பயணத்தின் போது படகுகள் அடிக்கடி பழுதடைவதாலும், படகுச் சேவைகளில் ஏற்படும் தடங்கல்களினாலும் நெடுந்தீவு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், அப்பகுதிக்கான சுற்றுலாத் துறையும் கடுமையாக வீழ்ச்சியடைந்து வருவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஹோமாகம குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது!

பொலிஸ் காவலில் இருந்த போது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, மேல் மாகாண…

88 0 0
இலங்கை செய்திகள்

காணாமல்போன மீனவர்களின் உறவுகளுக்கு ஆறுதல் கூறிய ரவிகரன் எம்.பி

நம்பிக்கையைத் தளரவிடாது, தங்கள் உறவுகள் மூவரும் உயிருடன் உள்ளார்கள் என்ற நம்பிக்கையுடன் இருங்கள் என,  முல்லைத்தீவு – மாத்தளன் பகுதியிலிருந்து கடந்த 26ஆம் திகதி கடற்றொழிலுக்குச்சென்று காணாமல்போன…

89 0 0
இலங்கை செய்திகள்

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்த மண்சரிவு முன்னெச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த…

89 0 0
இலங்கை செய்திகள்

சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு…

90 0 0