உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
28 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
80 பார்வைகள்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்த மண்சரிவு முன்னெச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த எச்சரிக்கை இன்று (28) பிற்பகல் 4.00 மணி முதல் நாளை (29) பிற்பகல் 4.00 மணி வரையிலான 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் நிலை எச்சரிக்கை (ஆம்பர்) க்குரிய மாவட்டங்களாக,

கம்பஹா மாவட்டம்: அத்தனகல்ல பிரதேச செயலகப் பிரிவு
களுத்துறை மாவட்டம்: புலத்சிங்கள மற்றும் தொடங்கொட பிரதேச செயலகப் பிரிவுகள்
கேகாலை மாவட்டம்: மாவனெல்லை மற்றும் அரநாயக்க பிரதேச செயலகப் பிரிவுகள்
நுவரெலியா மாவட்டம்: நோர்வூட் மற்றும் அம்பகமுவ கோரளை பிரதேச செயலகப் பிரிவுகள்
இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி, ஓபநாயக்க, குருவிட்ட, அயகம, எலபாத்த மற்றும் பெல்மடுல்ல பிரதேச செயலகப் பிரிவுகள்

முதல் நிலை எச்சரிக்கை (மஞ்சள்) விடுக்கப்பட்ட மாவட்டங்கள்,

கொழும்பு மாவட்டம்: சீதாவாக்க மற்றும் பாதுக்க பிரதேச செயலகப் பிரிவுகள்
காலி மாவட்டம்: நெலுவ, எல்பிட்டிய, தவலம, நியாகம மற்றும் கரந்தெனிய பிரதேச செயலகப் பிரிவுகள்
களுத்துறை மாவட்டம்: பேருவளை, மில்லனிய, அகலவத்தை, மதுராவல, ஹொரணை, வலல்லாவிட்ட, பாலிந்தநுவர, மதுகம மற்றும் இங்கிரிய பிரதேச செயலகப் பிரிவுகள்
கண்டி மாவட்டம்: உடபலாத்த, யட்டிநுவர, பஸ்பாகே கோரளை, உடுநுவர மற்றும் கங்கா இஹல கோரளை பிரதேச செயலகப் பிரிவுகள்

கேகாலை மாவட்டம்: கலிகமுவ, வரகாப்பொல, ருவன்வெல்ல, யட்டியாந்தோட்டை, ரம்புக்கனை, கேகாலை, புலத்கோஹுபிட்டிய, தெஹியோவிட்டை மற்றும் தெரணியகல பிரதேச செயலகப் பிரிவுகள்
குருநாகல் மாவட்டம்: குருநாகல் பிரதேச செயலகப் பிரிவு
மாத்தறை மாவட்டம்: கொட்டபொல மற்றும் பிட்டபெத்தர பிரதேச செயலகப் பிரிவுகள்
நுவரெலியா மாவட்டம்: கொத்மலை மேற்கு மற்றும் கொத்மலை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுகள்
இரத்தினபுரி மாவட்டம்: கலவானை, நிவித்திகலை, கிரியெல்ல, தொடகவலை, எஹெலியகொட மற்றும் பலங்கொட பிரதேச செயலகப் பிரிவுகள்

தொடர்ந்து சீரற்ற வானிலை நிலவி வருவதால், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்கள் இந்த எச்சரிக்கைகள் குறித்து தீவிர கவனம் செலுத்துமாறு பாதுகாப்புப் படையினரும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், மண் சரிவு, பாறைகள் வீழ்தல் அல்லது இயல்புக்கு மாறான நீர்வரத்து போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

குறிகட்டுவான் – நெடுந்தீவுக்கான படகு சேவைகள் பாதிப்பு!

யாழ்ப்பாணம், குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவுக்கு இடையிலான படகுச் சேவையில் ஈடுபட்டு வந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மூன்று படகுகளும் பழுதடைந்துள்ளதால், நெடுந்தீவுக்கான போக்குவரத்து பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.…

75 0 0
இலங்கை செய்திகள்

காணாமல்போன மீனவர்களின் உறவுகளுக்கு ஆறுதல் கூறிய ரவிகரன் எம்.பி

நம்பிக்கையைத் தளரவிடாது, தங்கள் உறவுகள் மூவரும் உயிருடன் உள்ளார்கள் என்ற நம்பிக்கையுடன் இருங்கள் என,  முல்லைத்தீவு – மாத்தளன் பகுதியிலிருந்து கடந்த 26ஆம் திகதி கடற்றொழிலுக்குச்சென்று காணாமல்போன…

79 0 0
இலங்கை செய்திகள்

சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு…

87 0 0
இலங்கை செய்திகள்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்காக பிராந்திய அலுவலகங்களுக்கு வருகை தரும் விண்ணப்பதாரர்கள் நாளை (29) முதல் இணையம் ஊடாக திகதியையும் நேரத்தையும்…

86 0 0