உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
28 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

காணாமல்போன மீனவர்களின் உறவுகளுக்கு ஆறுதல் கூறிய ரவிகரன் எம்.பி

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
84 பார்வைகள்

நம்பிக்கையைத் தளரவிடாது, தங்கள் உறவுகள் மூவரும் உயிருடன் உள்ளார்கள் என்ற நம்பிக்கையுடன் இருங்கள் என,  முல்லைத்தீவு – மாத்தளன் பகுதியிலிருந்து கடந்த 26ஆம் திகதி கடற்றொழிலுக்குச்சென்று காணாமல்போன மீனவர்களது உறவினர்களுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 28.10.2026இன்று ஆறுதல் கூறியுள்ளார்.

அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுடன் கலந்துரையாடி 29.10.2026 நாளையதினம் காணாமல் போன மீனவர்களைத் தேடிச்செல்லும் மீனவர் அணியினருக்காக பாதுகாப்புச் சட்டைகளையும் (safety jacket) பெற்றுக்கொடுப்பதற்கான ஒழுங்குகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது மேற்கொண்டார்.

மேலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

காணாமல்போயிருக்கின்ற மூன்றுபேரையும் தேடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு எம்மால் கடற்றொழில் அமைச்சர், முல்லைத்தீவு மாவட்டசெயலாளர், முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உள்ளிட்ட தரப்பினரிடம் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் உள்ளிட்ட தரப்பினர் காணமல்போன மூன்று பேரையும் தேடுகின்ற செயற்பாடுகளை முன்னெடுத்திருந்ததாக அறிகின்றோம்.

அத்தோடு மாத்தளன் கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் இளைஞர்களின் உதவியுடன் எட்டுப்படகுகள் 70கிலோமீற்றர்வரையில் கடலுக்குள் சென்று தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.

என்னைப்பொறுத்தவரை அவர்கள் திரும்பி வருவார்கள். அவர்கள் மூவரும் திரும்பி வரவேண்டும் என்ற வேண்டுதலுடன் 29.10.2026நாளைய தினமும் கடற்றொழிலாளர் சங்கத்தினரும், இளைஞர்களும் தேடுதல் பணிகளை முன்னெடுக்கவிருக்கின்றனர்.

எனவே மூவரையும் பறிகொடுத்துவிட்டோமென நினைத்து உறவுகள் கவலைகொள்ளவேண்டாம். மூவரும் இருக்கின்றார்கள் என நினைத்துக்கொள்ளுங்கள்.

உறவுகள் மூவரும் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையுடனேயே மீண்டும் 29ஆம்திகதி நாளையதினம் இந்த இளைஞர்கள் தேடிச் செல்லவுள்ளனர்.

ஆகவே நம்பிக்கையைத் தளரவிடாது, தங்கள் உறவுகள் மூவரும் உயிருடன் உள்ளார்கள் என்ற நம்பிக்கையுடன் இருங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது காணாமல் போன மீனவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுடன் கலந்துரையாடி 29.10.2026 நாளையதினம் காணாமல் போன மீனவர்களைத் தேடிச்செல்லும் மீனவர் அணியினருக்காக பாதுகாப்புச் சட்டைகளையும் (safety jacket) பெற்றுக்கொடுப்பதற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஹோமாகம குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது!

பொலிஸ் காவலில் இருந்த போது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, மேல் மாகாண…

84 0 0
இலங்கை செய்திகள்

குறிகட்டுவான் – நெடுந்தீவுக்கான படகு சேவைகள் பாதிப்பு!

யாழ்ப்பாணம், குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவுக்கு இடையிலான படகுச் சேவையில் ஈடுபட்டு வந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மூன்று படகுகளும் பழுதடைந்துள்ளதால், நெடுந்தீவுக்கான போக்குவரத்து பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.…

85 0 0
இலங்கை செய்திகள்

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்த மண்சரிவு முன்னெச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த…

85 0 0
இலங்கை செய்திகள்

சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு…

88 0 0