உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
28 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
87 பார்வைகள்

ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்காக பிராந்திய அலுவலகங்களுக்கு வருகை தரும் விண்ணப்பதாரர்கள் நாளை (29) முதல் இணையம் ஊடாக திகதியையும் நேரத்தையும் முன்பதிவு செய்வது கட்டாயமாகும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த சேவைகளுக்காக விண்ணப்பிப்பதற்கு முன்னர் இணையம் வழியாக திகதியையும் நேரத்தையும் முன்பதிவு செய்த பின்னரே பிராந்திய அலுவலகங்களுக்கு வருகை தர வேண்டும்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் நுழைந்ததன் பின்னர், ‘பிராந்திய அலுவலகங்கள் ஊடாக கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்காக திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ளுதல்’ என்ற இணைப்பு ஊடாக விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தின் சேவைகள் வழமைபோன்று நடைபெறும் என அதன் ஊடகப் பேச்சாளர் மஹேஷ் கருணாதாச தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

குறிகட்டுவான் – நெடுந்தீவுக்கான படகு சேவைகள் பாதிப்பு!

யாழ்ப்பாணம், குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவுக்கு இடையிலான படகுச் சேவையில் ஈடுபட்டு வந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மூன்று படகுகளும் பழுதடைந்துள்ளதால், நெடுந்தீவுக்கான போக்குவரத்து பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.…

75 0 0
இலங்கை செய்திகள்

காணாமல்போன மீனவர்களின் உறவுகளுக்கு ஆறுதல் கூறிய ரவிகரன் எம்.பி

நம்பிக்கையைத் தளரவிடாது, தங்கள் உறவுகள் மூவரும் உயிருடன் உள்ளார்கள் என்ற நம்பிக்கையுடன் இருங்கள் என,  முல்லைத்தீவு – மாத்தளன் பகுதியிலிருந்து கடந்த 26ஆம் திகதி கடற்றொழிலுக்குச்சென்று காணாமல்போன…

80 0 0
இலங்கை செய்திகள்

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்த மண்சரிவு முன்னெச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த…

80 0 0
இலங்கை செய்திகள்

சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு…

87 0 0