உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
28 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அட்டாளைச்சேனையில் காட்டு யானைகள் அட்டகாசம்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் அச்சுறுத்தல்

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
76 பார்வைகள்

அட்டாளைச்சேனை பிரதேச சபை அமைந்துள்ள புறத்தோட்டம் பகுதியில் நேற்றிரவு (27) உட்புகுந்த காட்டு யானைகள், பயன்தரக்கூடிய 20 தென்னை மரங்களை பிடுங்கி அழித்து நாசப்படுத்தியுள்ளதுடன், நெல் களஞ்சிய அறையை உடைத்து ஐந்து நெல் மூட்டைகளையும் சேதப்படுத்தியுள்ளன.

நேற்றிரவு அதிகாலை 4.00 மணியளவில் புறத்தோட்டம் பகுதிக்குள் நுழைந்த இரண்டு காட்டு யானைகள், ஏ.ஆர். உபைதுல்லா என்பவருக்குச் சொந்தமான காணியில் பராமரிக்கப்பட்டு வந்த சுமார் 20 பயன்தரும் தென்னை மரங்களை முற்றாக அழித்துள்ளதுடன், அங்கிருந்த நெல் களஞ்சியக் கடையின் இரும்புக் கதவை உடைத்து உள்ளே இருந்த நெல் மூட்டைகளையும் சேதப்படுத்தியுள்ளன.

அதேவேளை, புறத்தோட்டம் பகுதியைத் தொடர்ந்து அருகிலுள்ள முல்லைத்தீவுக் கிராமத்திற்குள்ளும் ஊடுருவிய இவ் யானைகள், அங்குள்ள அல்-ஜெஸீறா வித்தியாலயத்தின் சுற்று மதிலையும் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளன.

குறிப்பிட்ட இந்த இரண்டு காட்டு யானைகளும் குடியிருப்பு வீடுகளுக்குள் நுழைய முயன்ற போது, விழிப்படைந்த கிராம மக்கள் வீதிகளுக்கு இறங்கி சத்த வெடில்களைக் கொளுத்தியும் கூச்சலிட்டும் யானைகளை விரட்டியடித்துள்ளனர். பொதுமக்களின் இந்த உடனடி நடவடிக்கையினால் ஏற்படவிருந்த மேலும் பாரிய உயிரற் சேதங்களும் சொத்துச் சேதங்களும் தவிர்க்கப்பட்டுள்ளன.

அப்பகுதியின் எல்லைப் பகுதியில் யானை வேலிகளை அமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் நீண்டகாலமாக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும், இதுவரை அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, புறத்தோட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குள் காட்டு யானைகள் உட்புகுந்து பொதுமக்களின் உடமைகளையும், விவசாயப் பயிர்களையும் அழித்து சேதப்படுத்துவதைத் தடுக்கும் வகையில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் உடனடியாக தலையிட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு…

72 0 0
இலங்கை செய்திகள்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்காக பிராந்திய அலுவலகங்களுக்கு வருகை தரும் விண்ணப்பதாரர்கள் நாளை (29) முதல் இணையம் ஊடாக திகதியையும் நேரத்தையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (28) பிற்பகல் இங்கிலாந்தின் லண்டன் நகர் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-503 என்ற Airbus A330 ரக…

72 0 0
இலங்கை செய்திகள்

பொலிஸ் காவலில் உயி@ரிழந்த இளைஞனுக்கு நீதி வேண்டும் – எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தல்!

ஹோமாகம பொலிஸ் நிலைய காவலில் இருந்தபோது இஷார ஹர்ஷன என்ற இளைஞன் உயிரிழந்த சம்பவம் மற்றும் அரசாங்கத்தின் புதிய சட்டமூலங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…

76 0 0