உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
28 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

எதிராளிகளை முடக்கப் பார்க்கும் அநுர அரசு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
84 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக அல்லாமல், தமது அரசியல் எதிராளிகளைக் குறிப்பிட்ட காலத்துக்குள் முடக்கி வைப்பதற்கே நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன குற்றம் சாட்டினார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஊடகச் சந்திப்பில் சஞ்சீவ எதிரிமான்ன மேலும் தெரிவித்ததாவது,
“அரசால் தற்போது நடைமுறைப்படுத்த முயற்சிக்கப்படும் சில சட்டமூலங்கள் மற்றும் அதன் உள்ளடக்கங்கள் குறித்து மிகச் சிக்கலான சமூக உரையாடல் நிலவி வருகின்றது.

தேர்தல் காலத்திலும் அதற்கு முன்னரும் நீண்டகாலமாக மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியால் இந்த நாட்டுக்கு முன்மொழியப்பட்ட புதிய அரசியல் கலாச்சாரத்துக்கும், தற்போதைய அரசின் தற்போதைய சட்ட இயற்றல் மற்றும் சீர்திருத்த அணுகுமுறைக்கும் இடையே பாரிய முரண்பாடு நிலவுவதை நாம் காண்கின்றோம்.

தனிநபர் சுதந்திரம் தொடர்பான மிகவும் உணர்திறன் மிக்க நீதித்துறை அதிகாரங்களை நீதிமன்றமே வைத்திருக்க வேண்டும். ஆனால், இந்த அரசு அந்த அதிகாரங்களை வெளிப்படை விசாரணை முகவரகங்களிடம் ஒப்படைக்கும் அரசியல் மூலோபாயத்தைப் பின்பற்றி வருகின்றது.

நீதிமன்ற அதிகாரங்களை அரசு தனது அரசியல் புலனாய்வாளர்களின் கரங்களில் ஒப்படைக்க முயல்கின்றது. சமூகத்தைச் சீர்திருத்துவது அரசின் நோக்கமல்ல. மாறாகத் தமது அரசியல் எதிராளிகளைக் குறிப்பிட்ட காலத்துக்குள் அடைத்து வைப்பதன் மூலம், வலுவான எதிராளி இல்லாத ஒரு அரசியல் களத்தை உருவாக்கவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு முயற்சிக்கின்றது.

நீதிமன்றத்துக்குள் மட்டுமே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையைப் பொலிஸ் கூண்டுக்குள் தீர்க்க முடியாது என்பது ஜனாதிபதிக்காவது இப்போது புரிகின்றதா? ஹோமாகம பொலிஸ் கூண்டுக்குள் இருந்து கேட்ட அலறல் சத்தம் இந்த அரசுக்கும் ஜனாதிபதிக்கும் கேட்டதா என்று நாம் கேட்கின்றோம்.

உயிரிழந்த நபர் நல்லவரா கெட்டவரா என்பது இங்கு கேள்வியல்ல. தவறிழைத்த ஒருவருக்குத் தண்டனை வழங்கும் முறை இதுவல்ல. நீதிமன்றத்தால் வழங்கப்பட வேண்டிய தண்டனை, பொலிஸ் கூண்டிற்குள் மரண தண்டனையாக மாறும் ஒரு சமூகத்துக்குச் சட்டப் பாதுகாப்பை வழங்கவே அரசு முயல்கின்றது.

அரசமைப்புச் சட்டத்தின் படியும் அரசியல் அறிவியலின் படியும், ஒரு நாட்டின் அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்றியமைக்கும் வகையில் புதிய சட்டங்களை உருவாக்க முடியாது. தனிநபர் சுதந்திரம் என்பது அரசமைப்பின் அடிப்படை உரிமையாக உறுதி செய்யப்பட்டுள்ள ஒன்றாகும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மக்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற கொள்கைப் பிரகடனத்தின் வாக்குறுதிகளுக்கு அமைவாக, இந்த ஆண்டிலாவது வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க ஜனாதிபதியால் முடியுமா? இந்த அரசு தனது சொந்தக் கொள்கைப் பிரகடனத்தையே மறந்து வேறு ஒரு உலகில் இருந்துகொண்டு ஆட்சியை நடத்தப் பார்க்கின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஆபத்தான நிலையில் புங்குடுதீவு வாணர் தாம்போதி கடற்பாலம் – உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை!

யாழ்ப்பாணக் குடாநாட்டையும் தீவகப் பகுதிகளையும் இணைக்கும் முக்கிய போக்குவரத்து மார்க்கமான புங்குடுதீவு வாணர் தாம்போதி கடற்பாலம், நிரந்தர புனரமைப்பின்றி இருப்பதுடன், அதன் இரு கரைகளும் பாதுகாப்பு கற்களோ…

86 0 0
இலங்கை செய்திகள்

நிந்தவூரில் கோழி இறைச்சியின் விலையைக் காட்சிப்படுத்துவது கட்டாயம்!

நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சியின் விலையை நாளை முதல் நுகர்வோருக்குத் தெளிவாகத் தெரியும் வகையில் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என நிந்தவூர்…

69 0 0
இலங்கை செய்திகள்

அட்டாளைச்சேனையில் காட்டு யானைகள் அட்டகாசம்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் அச்சுறுத்தல்

அட்டாளைச்சேனை பிரதேச சபை அமைந்துள்ள புறத்தோட்டம் பகுதியில் நேற்றிரவு (27) உட்புகுந்த காட்டு யானைகள், பயன்தரக்கூடிய 20 தென்னை மரங்களை பிடுங்கி அழித்து நாசப்படுத்தியுள்ளதுடன், நெல் களஞ்சிய…

72 0 0
இலங்கை செய்திகள்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கைது.!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் லலித் பியூம் பெரேரா, இலஞ்ச, ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.…

82 0 0